இந்தியா குறித்து உலக வர்த்தக அமைப்பிற்குக் கடிதம் எழுதியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். மேலும் உலக வர்த்தக அமைப்பின் கீழ் இந்தியாவும், சீனாவும் வளரும் நாடுகள் பட்டியலில் உள்ளது. இதனால் வளர்ந்த நாடுகளுடனான வர்த்தகத்தில் அதிக நன்மைகள் பெறுகின்றன.
அதுமட்டுமின்றி, இந்தியாவையும் சீனாவையும் வளரும் நாடுகள் பட்டியில் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், இரு நாடுகளும் அமெரிக்காவைச் சுரண்டுகிறது எனவும் காட்டமாகக் கூறியுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.
அமெரிக்க அரசு அந்நாட்டில் சீனப் பொருட்களுக்கு அதிக வரி விதித்தும், இந்தியாவிற்கான சிறப்பு வர்த்தக அந்தஸ்தை ரத்து செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க....குர்து இனத்தவர் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்: அமெரிக்கா நம்பிக்கை