அமெரிக்காவின் இடாஹோ மாகாணத்தைச் சேர்ந்தவர் சாத் டேபெல். இவர் சில மாதங்களுக்கு முன்னர், வாழ்க்கைத் துணையை இழந்த லோரி வலோ டேபெல் என்ற பெண்ணை மறுமணம் செய்து கொண்டார். லோரி வலோவுக்கு ஜோஷுவா (வயது ஏழு) என்ற மகனும், ரைலீ ரயன் (வயது 17) என்ற மகளும் உள்ளனர். இவர்கள் குடும்பமாக சலேம் பகுதியில் வசித்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஜோஷிவா, ரைலீ ரயன் இருவரும் மாயமாகினர். இது குறித்து அவர்களது உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து குழந்தைகளைத் தேடி வந்தனர்.

இதனிடையே, சந்தேகத்தின் பேரில் சேத் டேபெல்லையும் காவல் துறையினர் கைது செய்தனர். மேலும், அவரது மனைவியும், குழந்தைகளின் தாயுமான லோரி வலோவும் குழந்தைகளை கைவிட்ட குற்றத்திற்காக 7.5 கோடி ரூபாய் அபராதத்துடன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சாத் டேபெலின் வீட்டில் நேற்று நடத்தப்பட்ட சோதனையில் சில மனித எலும்புக் கூடுகளை கண்டறிந்துள்ளதாகக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த புது தடயங்கள் குழந்தைகள் மாயமான வழக்கின் மர்ம முடிச்சுக்களை அவிழ்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : சட்ட நகலை எரிக்கலாமா? விவசாயியை குண்டுக்கட்டாகத் தூக்கிய காவல்துறை!