இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், "இந்தியப் பயணம் அருமையாக இருந்தது. பிரதமர் நரேந்திர மோடி என்னுடைய உற்ற நண்பர். அந்நாட்டு மக்களுக்கு அவர் நண்பராக உள்ளார். (மொடீரா) ஸ்டேடியத்தில் எனக்கு கிடைத்தது போலவே அவருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. எல்லா விதமான விவகாரங்கள் குறித்தும் நாங்கள் ஆலோசித்தோம்" என்றார்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தனது மனைவி மெலனியா, மகள் இவாங்கா, மருமகன் ஜாரெட் குஷ்னர் எனக் குடும்பத்துடன் கடந்த மாதம் (பிப்ரவரி) 24, 25 ஆகிய தேதிகளில் இந்தியா வந்திருந்தார். அதிபராகப் பரவேற்ற பின் ட்ரம்ப், அரசுமுறைப் பயணமாக இந்தியா வருவது இதுவே முதல்முறை.
இந்த இரண்டு நாள் பயணத்தின்போது, இரண்டு நாடுகளுக்கு இடையே 3 பில்லயன் டாலர் மதிப்புள்ள பாதுகாப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.
இதையும் படிங்க : கொரோனா அச்சுறுத்தல்: இத்தாலியைத் தொடர்ந்து ஸ்பெயினிலும் அவசர நிலை அறிவிப்பு!