ETV Bharat / international

H1B விசாவுக்கு திடீர் தடை: ட்ரம்ப் அரசின் அமெரிக்க விசா கொள்கையில் மாற்றம் ஏன்? - அமெரிக்கா குடியேற்றச் சட்டம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஹெச்1பி விசாவுக்கு விதித்த தடை தொடர்பாக ஐநா சபையின் இந்தியாவுக்கான முன்னாள் நிரந்தர தூதர் மற்றும் வாஷிங்டன் தூதரகத்தின் முன்னாள் இந்திய தூதர் அஷோக் முகர்ஜி எழுதிய சிறப்புக் கட்டுரையின் தமிழாக்கம் இதோ...

எச்1பி
எச்1பி
author img

By

Published : Jun 26, 2020, 11:39 AM IST

Updated : Jun 26, 2020, 11:55 AM IST

அமெரிக்க பொருளாதார வீழ்ச்சியும் அதிபர் தேர்தலும்

கரோனா பெருந்தொற்றால் அமெரிக்காவில் பெருமளவில் அதிகரித்துவரும் வேலை இழப்பைக் கருத்தில் கொண்டு, அயல்நாட்டவருக்குப் பணிபுரிய வழங்கப்படும் அனுமதியை (விசா) நிறுத்திவைத்து அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார், இது இந்தியாவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அமெரிக்க அதிபர் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள நிலையில், எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை எதிர்பார்த்தபடியே பெருத்த விவாதத்திற்கு உள்ளகியுள்ளது.

குடியேற்றத் தடையும் விசா கிடுக்கிப் பிடியும்

வெளிநாட்டினர் அமெரிக்க குடியுரிமை பெறவும், பணிபுரியவும் அந்நாட்டில் ஐந்து விதமான விசா மற்றும் குடியுரிமை வழங்கும் நடைமுறை உள்ளது: இயல்பார்ந்த குடியுரிமை, நிரந்தரமாக தங்கியிருத்தல் (கிரீன் கார்டு), குடும்பத்தினர், அகதிகள் மற்றும் தத்து எடுத்தல். இதன் அடிப்படையில், பொருளாதார, கல்வி, கலாச்சார தளங்களில், குடியேற்றம் அல்லாத குறுகிய கால பணிகளுக்கான அனுமதியை வரையறை செய்து ஹெச்1பி, ஹெச்2பி, ஜெ மற்றும் எல் விசாக்கள் வழங்கப்படுகிறது. இந்நிலையில் குடியேற்றமற்ற விசா வேண்டுவோர் அமெரிக்கா வருவதை நடப்பாண்டு ஜூன் 24 முதல் டிசம்பர் 31 வரை தடை செய்துள்ளது டிரம்ப் நிர்வாகம். இதற்கு, மிக அரிதான ஒரு சில விதிவிலக்குகள் மட்டுமே உண்டு.

அமெரிக்க நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான உயர் தொழில்நுட்ப பணிகளில், பல்கலைக்கழக பட்டம் பெற்ற திறமையுள்ள, சிறப்புத் தகுதிவாய்ந்த, வெளிநாட்டினரை வேலைக்கமர்த்த ஹெச்1பி விசா வழங்கப்படுகிறது. 1990 அமெரிக்க குடியேற்ற சட்டத்தின்படி வழங்கப்படும் இந்த விசா, வழக்கமாக 3 முதல் 6 ஆண்டுகள் வரை செல்லும். ஆனால், பணிக்காலம் நிறைவுற்றாலும், விசா பெற்றவர் அமெரிக்காவில் இருந்து வெளியேற வேண்டியதில்லை. இதுவே இதன் சிறப்பம்சம் ஆகும்.

விவசாயம் தவிர்த்த பிற துறைசார்ந்த தொழிலாளர்கள், அமெரிக்க நிறுவனங்களில் 6 மாதம் முதல் ஒரு வருடம் வரை பணிபுரிய வழங்கப்படும் H2B விசா சற்றே வித்தியாசமானது. இந்தியாவை தவிர்த்த 81 நாட்டினருக்கு இது வழங்கப்படுகிறது. இந்த விசா பெற கல்வித் தகுதியோ எந்த ஒரு தனித் திறமையோ வேண்டியதில்லை. கல்வி மற்றும் கலாச்சார நல்லுறவைப் பேணவும், உலகளாவிய புரிந்துணர்வு வளர்வதற்கும் வேண்டி J விசா வழங்கப்படுகிறது. இந்த விசா பெறுவோர், தங்கள் பணி முடிந்ததும் நாடு திரும்ப வேண்டும். அமெரிக்காவிலேயே தங்கிவிடக்கூடாது. அடுத்ததாக, அமெரிக்கவிற்கு வெளியே அமைந்துள்ள அமெரிக்க நிறுவனங்களின் அதிகாரிகள், தங்கள் கம்பெனிகளுக்காக தற்காலிகமாக அமெரிக்கவில் பணியாற்ற, அல்லது தனித்துவமான சேவை புரிய வழங்கப்படுவது L விசா.

விசா தடைக்கான முன்னோட்டம்

இதற்கு முன்பாக, அமெரிக்க தொழிலாளரின் வேலையைப் பறிக்கும் வகையில் அல்லது வேலைக்கு ஊறு விளைவிக்கும் வகையில் குடியேறுவோரை 60 நாட்களுக்குத் தடைசெய்து, ஏப்ரல் 22 அன்று டிரம்ப் நிர்வாகம் உத்தரவு வெளியிட்டது. கரோனா நோய்த் தொற்றுப் பரவல் தொடங்கிய சமயத்தில் வெளியிடப்பட்ட இந்த தடை உத்தரவில் ஹெச்1பி, ஹெச்2பி, எல் பிரிவுகள் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குடியேற்றம் வேண்டாதோர் அமெரிக்காவில் நுழைவதைத் தடுக்கும் நடவடிக்கை, எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தல் நிறைவுபெரும் வரை தொடரும். தேர்தலில் வெற்றிபெற வெள்ளை இனத்தவரின் வாக்குகளைக் குறிவைத்து செயல்படுத்தப்படும் இந்த நடவடிக்கைகள், அதிபர் டிரம்ப் மெற்கொண்டுவரும் அயல் நாட்டினருக்கு எதிரான செயல்பாடுகளின் தொடர்ச்சியே ஆகும்.

இவ்வாறு, டிரம்ப் நிர்வாகம் குடியேற்றத்திற்கு எதிரான கொள்கைகளை கடந்த மூன்று ஆண்டுகளாகவே தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. ஆப்பிரிக்க மற்றும் இஸ்லாமியர் பெரும்பான்மையாக உள்ள நாடுகளுக்கு எதிராக அமெரிக்க விதித்துள்ள பயனத்தடையானது, அமெரிக்காவில் தஞ்சம் புகுவது என்பதைக் குதிரைக் கொம்பு என்ற நிலைக்குத் தள்ளிவிட்டது. மேலும், சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் குடியேறுவோரைத் தடுக்க, அமெரிக்காவிற்கும் மெக்சிகோவிற்கும் இடையே உள்ள எல்லையில் நீண்ட தடுப்புச் சுவர் எழுப்புவதில் அதிபர் டிரம்ப் தனிப்பட்ட அக்கறை எடுத்துக்கொண்டுள்ளது தெரிந்ததே. இந்நிலையில், அமெரிக்க குடியுரிமையை முறைப்படுத்தும் அதிகாரம் கொண்ட ‘அமெரிக்க குடியுரிமை மற்றும் தகவல் சேவை’ (USCIS), அமைப்பு மார்ச் மாதம் முதல் முடங்கியுள்ளது. இதனால், நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் கூட கிடப்பில் போடப்பட்டுள்ளன. குடியுரிமை மற்றும் விசா தொடர்பான அணைத்து செயல்பாடுகளும் தேங்கிக் கிடக்கின்றன.

பொருளாதார சரிவும் வெளிநாட்டினருக்கான தடையும்

இந்த தடை நடவடிக்கைகளுக்கு தூண்டுதலாக அமைந்த உடனடி காரணம், கரோனா பெருந்தொற்றால், அமெரிக்க பொருளாதாரம் சரிந்து வெலையின்மை புதிய உச்சத்திற்கு சென்றதே. நடப்பாண்டிலேயே, பிப்ரவரி மாதம் முதல் ஏப்ரல் வரையிலான காலாண்டில் மட்டும் 20 மில்லியன் அமெரிக்கர்கள் வேலை இழந்துள்ளனர். ஆனால், அவ்வாறு பலரை வெலையிலிருந்து நீக்கிய முக்கிய தொழில் சார்ந்த நிறுவனங்கள், காலிப் பணிகளை நிரப்ப ஹெச்1பி மற்றும் எல் விசா உள்ளவர்களை நாடியுள்ளன. இது மட்டுமா? மேலும், 17 மில்லியன் அமெரிக்கரை வீட்டுக்கு அனுப்பியுள்ள நிறுவனங்கள், அந்த வேலைகளுக்கு குடியேற்றமற்ற ஹெச்1பி விசா உள்ள வெளி நாட்டினரைப் பணியமர்த்த முயற்சித்துள்ளன.

அதிபர் டிரம்ப், தனது வெளிநாட்டினருக்கு எதிரான நடவடிக்கைகள் மூலமாக அமெரிக்க குடிமக்களுக்கு 525,000 வேலைகளை 2020 ஆம் ஆண்டின் இறுதிவரை உத்தரவாதப் படுத்தியுள்ளார் என ஆய்வாளர்களும் அரசியல் நோக்கர்களும் தெரிவிக்கின்றனர். இதனால் ஆப்பிரிக்க-அமெரிக்கர் (கறுப்பு இனத்தவர்), பல்கலைக்கழக அல்லது கல்லூரிப் பட்டம் இல்லாதோர், சிறுபான்மையினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோரும், இந்த வருட வரையிலாவது பணிப் பாதுகாப்பு பெறுவர்.

இந்த தீவிர செயல்பாடுகளுக்கான காரணத்தை விளக்கி, அமெரிக்க அதிபர் முன்பு கூறியிருப்பதை இங்கு நாம் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும். “நமது பொருளாதாரத்தின் ஒவ்வொரு துறையில் உள்ள வேலைக்கும் அமெரிக்க குடிமக்கள், வெளிநாட்டுப் பிரஜைகளுடன் போட்டியிட வேண்டி இருக்கிறது. பல மில்லியன் கணக்கில் தற்காலிகப் பணிகளுக்காக அமெரிக்காவிற்குள் நுழையும் வெளி நாட்டினருடன் நம்மவரும் போட்டியிடும் கடுமையான சூழல் உள்ளது. இந்த தற்காலிக பணிக்கு வருவோர், தனியாக வருவதில்ல. மாறாக மனைவி மக்களுடன் வருகின்றனர். அவர்களும் அமெரிக்கருக்கான பணிகளில் போட்டியாளராக உள்ளனர்,” என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வெளி நாட்டினருக்கான பணித்தடையில் இருந்து ஒரு சில விதிவிலக்குகளும் உண்டு. குறிப்பாக, உணவுப்பொருள் வழங்கல் சங்கிலித் தொடரில் உள்ள ஹெச்2பி விசா உள்ளவர்களும் மற்றும் அமெரிக்காவின் தேசிய நலனைக் காப்பதில் அவசியம் தேவைப்படுவோரும் விலக்குப் பெற்றுள்ளனர். அமெரிக்காவின் ”தேசிய நலன்” என்ற அடிப்படையின் கீழ், ஐந்து பிரிவுகளில் வெளிநாட்டவருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அந்த ஐந்து பிரிவுகள் பின்வருவருமாறு: பாதுகாப்புத் துறையில் தேவைப்படுவோர், சட்டம் ஒழுங்கு அமலாக்கம், தூதரக உறவு அல்லது தேச பாதுகாப்பு, கோவிட்-19 தொடர்பான பணிகளுக்குத் தேவைப்படும் மருத்துவர், செவிலியர், பணியாளர் மற்றும் அமெரிக்க பொருளாதார உடனடி மீட்சிக்கும் தொடர் முன்னேற்றத்திற்கும் இன்றியமையாதவர்கள் என கருதப்படுவோர்.

இதில் வினோதம் என்னவென்றால், இந்த ஐந்து பிரிவுகளிலும் இறுதியாக உள்ள பிரிவுதான். இதன் மூலமாக, அரசியல் செல்வாக்குள்ள அமெரிக்க நிறுவனங்கள், டிரம்ப் நிர்வாகத்திடம் தங்களுக்கு உள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி குறைந்த எண்ணிக்கையிலாவது ஹெச்1பி மற்றும் எல் உள்ளவர்களைப் பணியமர்த்த விலக்குப் பெற வாய்ப்புள்ளது. 2020 ஆம் அண்டு இறுதி வரைக்கும் பணியமர்த்திக்கொள்ள விலக்கு பெற்றுவிடலாம்.

ஹெ1பி விசாவும் இந்தியாவும்

பிற நாடுகளை விட ஹெச்1பி விசா தடையின் தாக்கம், இந்தியாவில் கூடுதலாக இருக்கும் என்பதுடன், தற்போதே அது தெரிய ஆரம்பித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்கா வழங்கும் 85,000 ஹெச்1பி விசாக்களில் சற்றேரக்குறைய மூன்றில் ஒரு பங்கு இந்தியருக்கு சென்றுவிடுகிறது. இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால், தொழில் நுட்பத்துறையில் பணியாற்றுவோரே இதன் பயனாளிகள். அமெரிக்க அரசு ஹெச்1பி விசா வழங்கும் போக்கினைக் கணக்கில் எடுத்துப் பார்த்தோம் என்றால், 2004 முதல் 2012 வரையிலான 8 வருடங்களில் 500,000 விசாக்கள் இந்தியருக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு விசா பெற்றோர் மற்றும் அவர்தம் குடும்பத்தினர் என உள்ளவர்களின் எண்ணிக்கைமட்டும் 750,000. இதில் வியப்பத்ற்கு ஏதுமில்லை. அமெரிக்காவில் உள்ள 3 மில்லியன் இந்தியரில் இவர்கள் கணிசமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அமெரிக்க அரசியல் பொருளாதார தளங்களில் முன்னெப்போத்ம் இல்லாத அளவில் இந்திய சமூகம், வலுவாக செயலாற்றி வருவதும் கண்கூடு.

இங்கு முக்கியமான ஒரு விஷயத்தை மறந்துவிடக்கூடாது. ஹெச்1பி விசா முறையினால் பயனடைந்துள்ளவை இந்திய பெரு நிறுவனங்கள்தான். குறிப்பிட்டுச் சொல்லவேண்டும் என்றால் டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), இன்ஃபோசிஸ், விப்ரோ, டெக் மஹிந்த்ரா, ஹெச் சி எல் டெக்னாலஜீஸ் (HCL) மற்றும் லார்ஸன் அண்ட் தூப்ரோ இன்ஃபொடெக். அமெரிக்காவில் பெருமளவில் முதலீடு செய்துள்ள 100 இந்திய நிறுவனங்களில் இவை முக்கியமானவை. 2017ஆம் ஆண்டு வரை, இந்த 100 நிறுவனங்களின் 17.9 பில்லியன் டாலர் முதலீடு, அமெரிக்காவில் 113,000 வேலைவாய்ப்பை உருவாக்கியுள்ளது. அந்நாட்டின் 50 மாநிலங்களிலும் தடம்பதித்து வேலை வாய்ப்பைப் பெருக்கியுள்ளன இந்த இந்திய நிறுவனங்கள்.

பிற நாடுகளை எல்லாம் விட, இந்தியாவுடன் அதிகப்படியான வர்த்தக உறவு கொண்டுள்ள தேசம் அமெரிக்காதான். பொருட்கள் மற்றும் சேவை என அணைத்திலும் முக்கிய பங்குதாரராக அமெரிக்கா விளங்குகிறது. இந்நிலையில், ஹெச்1பி வைத்துள்ள திறன்மிகு பணியாளரின் அமெரிக்க வரத்து திடீரென தடைபட்டால், அது அங்கு இயங்கிவரும் இந்திய நிறுவனங்களின் செயல்பாட்டை வெகுவாக பாதிக்கும். மேலும், இது அமெரிக்க பொருளாதாரத்தில் தொழில்நுட்ப மற்றும் உற்பத்தித் துறைகளைக் கடந்து கணக்குப்பதிவு துறையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த துறைகள் அனைத்தும், கரோனா உருவாக்கிய பேரழிவால் சரிவில் உள்ள அமெரிக்கப் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் எந்த ஒரு தேசிய செயல் திட்டத்திற்கும் இன்றியமையாதவை ஆகும்.

குடியேற்றம் வேண்டாத விசா உள்ள தொழிலாளர் வருகைக்கு அமெரிக்கா விதித்துள்ள தடை, அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு பெரும் பாதிப்பையே ஏற்படுத்தும். குறிப்பாக, இந்திய-அமெரிக்க தொழில் வர்த்தக உறவில் இரு தரப்புக்கும் நலன் பயக்கும் அம்சங்களை மட்டுமன்றி, இரு நாடுகளுக்கும் இடையேய வளர்ந்து வரும் இராணுவ ஒத்துழைப்பிலும் இது தாக்கத்தை ஏற்படுத்தும்.

இதையும் படிங்க: கோவிட்-19 தாக்கம்: விசா விதிமுறைகளில் கொண்டுவந்த மாற்றம்

Last Updated : Jun 26, 2020, 11:55 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.