ஹெச்-1பி நுழைவு இசைவு என்பது வெளிநாட்டினர் அமெரிக்காவில் தங்கி பணியாற்றிவதற்கானது. இந்த நுழைவு இசைவு குடியேற்றமில்லாமல், அமெரிக்காவில் தங்கி பணியாற்றுவதற்காக மட்டும் அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து தொழிலாளர் நலத் துறை அமைச்சர் அலெக்சாண்டரர் அகோஸ்டா கூறும்போது, ‘வெளிநாட்டிலிருந்து அமெரிக்காவிற்கு பணியாற்றுவதற்கு வழங்கப்படும் ஹெச்-1பி நுவைவு இசைவுக்கான விண்ணப்பக் கட்டணத்தை உயர்த்துவது குறித்து பரிசீலித்து வருகிறோம்.
அவ்வாறு கூடுதலாக வசூலிக்கப்படும் தொகையை, அமெரிக்கப் பணியாளர்களின் பணித் திறனை மேம்படுத்துவதற்கான பயிற்சி வகுப்புகள் நடத்துவதற்குப் பயன்படுத்த திட்டமிட்டு வருகிறோம்’ என்றார்.