ETV Bharat / international

H1-B விசா இடைக்காலத் தடை - ரூ. 1200 கோடி இழப்பு! - Crisil report on H1-B visa suspension impact on Indian IT firms

மும்பை: H1-B விசாவின் இடைக்கால தடையால் இந்திய ஐடி நிறுவனங்களின் லாபத்தில் ரூ. 1200 கோடி வரை இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என இந்திய ஆய்வு நிறுவனமான சிரிசில் தகவல் தெரிவித்துள்ளது.

H1-B visa suspension
H1-B visa suspension
author img

By

Published : Jul 6, 2020, 5:32 PM IST

அமெரிக்காவில் வேலையில்லா திண்டாட்டத்தை சமாளிக்க டொனால்டு ட்ரம்ப் அரசாங்கம் H1-B விசாவுக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது. இதனால் இந்திய ஐடி நிறுவனங்களுக்கு ரூ. 1200 கோடி வரை இழப்பு ஏற்படலாம் என சிரிசில் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சிரிசில், கரோனா சூழல் இதற்கு ஒரு முக்கிய காரணமாகும். பொருளாதார ஆண்டு 2021-இல் இந்தியாவின் 15 தலைசிறந்த நிறுவனங்களின் 23 சதவிகித லாபத்தில் 2.50 சதவிகிதம் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

அமெரிக்காவின் தலைசிறந்த 5 இந்திய நிறுவனங்களில் பணிபுரியும் இந்தியர்களில் 5 சதவிகிதம் பேர் H1-B விசா பெற்றுச் சென்றவர்கள். இவர்களால் அந்நிறுவனங்கள் 60 சதவிகித வருவாயைப் பெறுகிறது. 2017ஆம் ஆண்டு 30-35 விழுக்காடு அமெரிக்கர்கள் அங்கு பணிபுரிந்த நிலையில், அது தற்போது 55-60 விழுக்காடாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

எனினும் ஐடி நிறுவனங்களுக்கு பெரும் பொருளாதார சிக்கல் இருக்காதென சிரிசில் தெரிவித்துள்ளது.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.