உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான Google தனது ஊழியர்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பில், கரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளைப் பின்பற்றி தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் எனவும்,
வரும் ஆண்டு ஜனவரி 18ஆம் தேதிக்குள் தடுப்பூசி விதிகளுக்கு இணங்காத பணியாளர்கள் 30 நாட்களுக்கு பணத்துடன் கூடிய நிர்வாக விடுப்பில் வைக்கப்படுவார்கள் என்றும் கூறியுள்ளது.
அந்த காலத்தில், தடுப்பூசி செலுத்திக்கொண்டால் பிரச்னை இல்லை என்றும்; அதைத் தொடர்ந்தும் அவர்கள் ஆறுமாதம் வரை தடுப்பூசி செலுத்தவில்லை என்றால் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் எச்சரித்துள்ளது.
கூகுள் நிறுவனத்தில் வரும் ஆண்டு ஜனவரி 10 முதல் வாரத்தில் சுமார் மூன்று நாட்களுக்கு ஊழியர்கள் அலுவலகத்திற்குத் திரும்புவார்கள் என்று முன்பு எதிர்பார்க்கப்பட்டது.
முன்னதாக, இந்த மாதத் தொடக்கத்தில், தடுப்பூசி கட்டாயம் என்னும் அறிவிப்பு வெளியானது, அதன் ஊழியர்களிடமிருந்து சில எதிர்ப்புகளை உண்டாக்கவே கூகுள், தனது ஊழியர்களை அலுவலகத்திற்குத் திரும்ப அழைக்கும் திட்டத்தை காலவரையின்றி ஒத்திவைத்துள்ளது.
இதையும் படிங்க: சிக்கலான நிலையில் அசாதாரண துணிச்சல்காரர் கேப்டன் வருண் சிங்!