செனட் துணைக்குழு தலைவராக தொழில்நுட்ப விமர்சகரும் , டெக்ஸாஸ் மாகாணத்தின் குடியரசு கட்சியின் செனட்டருமான டெட் க்ருஸ் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், வலதுசாரி விவகாரத்தை சமூக வலைதளங்கள் தொடர்ந்து தணிக்கை செய்வதாக குற்றஞ்சாட்டினார். இதுதொடர்பாக நடத்தப்படும் மாநாட்டில் ஃபேஸ்புக், கூகுள் உள்ளிட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே, செனட் சபையில் தணிக்கை தொடர்பான விசாரணையில் இந்த நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஃபேஸ்புக், கூகுள், ட்விட்டர் ஆகிய நிறுவனங்கள் ஜனநாயகவாதிகளுக்கு எதிராகத் தீவிரமாக செயல்படுவதாக குற்றஞ்சாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.