பிரபல தேடுபொறி இயந்திரமான கூகுள் தனது 21ஆவது ஆண்டில் இன்று அடியெடுத்து வைக்கிறது. கொண்டாட்டத்தை வெளிப்படுத்தும் விதமாகக் கூகுள் நிறுவனம் இன்று புதிய டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
உலகில் அனைத்து கேள்விகளுக்கும் பதில் தெரிந்து வைத்துள்ள கூகுளுக்கு அதன் பிறந்த தேதி சரியாகத் தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது. கூகுளின் தளத்தில் செப்டம்பர் 4ஆம் தேதி தொடங்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், 2002ஆம் ஆண்டு முதல் கூகுள் செப்டம்பர் 27ஆம் தேதி அதன் பிறந்தநாளைக் கொண்டாடிவருகிறது. இதனிடையே 2005ஆம் ஆண்டு மட்டும் கூகுள் செப்டம்பர் 26ஆம் தேதி அதன் பிறந்தநாளைக் கொண்டாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், முக்கிய தினங்களைக் கொண்டாடும் விதமாக வெளியாகும் கூகுள் டூடுல் முதன்முதலில் 1998ஆம் ஆண்டு அமெரிக்காவில் புகழ்பெற்ற 'பர்னிங் மேன்' (Burning Man Festival) என்ற விழாவுக்காக உருவாக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. பின்னர் அதற்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, அனைத்து முக்கிய நிகழ்வுகளுக்கும் கூகுள் தனது டூடுலை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளது.
கூகுளை உருவாக்கியவர்கள் அதற்கு முதலில் 'கூகோல்' என்றே பெயரிட இருந்தார்கள் பின்னர் தவறுதலாகதான், அது கூகுள் என்று மாறியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்கலாமே: 21ஆம் ஆண்டில் அடி எடுத்துவைக்கிறது கூகுள் (சிறப்புக்கட்டுரை)