சர்வதேச அளவில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் கோவிட்-19 இரண்டாம் அலை தீவிரமடைந்துவருகிறது. இதுவரை ஏழு கோடியே 32 லட்சத்து 12 ஆயிரத்து 302 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை 16 லட்சத்து 28 ஆயிரத்து 442ஆக அதிகரித்துள்ளது.
வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஐந்து கோடியே 13 லட்சத்து 53 ஆயிரத்து 862ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் ஐந்து லட்சத்து 57 ஆயிரத்து 700 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒன்பதாயிரத்து 414 பேர் உயிரிழந்துள்ளனர். உலக அளவில் அதிக கரோனா பாதிப்பு அமெரிக்காவில் பதிவாகியுள்ளது. இதுவரை அந்நாட்டில் ஒரு கோடியே 69 லட்சத்து 42 ஆயிரத்து 920 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று லட்சத்து எட்டாயிரத்து 91 பேர் உயிரிழந்துள்ளனர்.
அந்நாட்டில் தடுப்பூசி பயன்பாட்டிற்கு தற்போது ஒப்புதல் கிடைத்துள்ளதால், அங்குள்ள மருத்துவ தொழிலாளர்களுக்கு விரைவாக தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமடைந்துவருகிறது.
அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இந்தியா இரண்டாம் இடத்திலும், பிரேசில் மூன்றாம் இடத்திலும் உள்ளது. அதேவேளை உயிரிழப்பு அதிகம் கொண்ட நாடுகளின் பட்டியலில் பிரேசில் இரண்டாம் இடத்திலும், இந்தியா மூன்றாம் இடத்திலும் உள்ளது.
பிரேசில் நாட்டில் தற்போது நோய்த்தொற்று எண்ணிக்கை 69 லட்சத்து 29 ஆயிரத்தை கடந்துள்ளது. உயிரிழப்பும் ஒரு லட்சத்து 81 ஆயிரத்து 945ஆக உள்ளது.
இதையும் படிங்க: செவிலியருக்கு முதல் தடுப்பூசியை செலுத்திய கனடா