சர்வதேச அளவில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் கோவிட்-19 இரண்டாம் அலை தீவிரமடைந்து வருகிறது.
குறிப்பாக அமெரிக்கா, பிரிட்டன், இத்தாலி, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்துவருகிறது.
தற்போதைய பாதிப்பு நிலவரம்
இதுவரை ஏழு கோடியே 90 லட்சத்து 86 ஆயிரத்து 170 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17 லட்சத்து 38 ஆயிரத்து 168ஆக அதிகரித்துள்ளது.
வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஐந்து கோடியே 56 லட்சத்து 74 ஆயிரத்து 767ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் ஆறு லட்சத்து 95 ஆயிரத்து 225 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 ஆயிரத்து 672 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச நாடுகளின் நிலவரம்
உலகளவில் அதிக கரோனா பாதிப்பு அமெரிக்காவில் பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 2 லட்சதுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை அந்நாட்டில் ஒரு கோடியே 89 லட்சத்து 17 ஆயிரத்து 152 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று லட்சத்து 34 ஆயிரத்து 218 பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்காவுக்கு அடுத்தப்படியாக அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இந்தியா இரண்டாம் இடத்திலும், பிரேசில் மூன்றாம் இடத்திலும் உள்ளது. அதேவேளை உயிரிழப்பு அதிகம் கொண்ட நாடுகளின் பட்டியலில் பிரேசில் இரண்டாம் இடத்திலும், இந்தியா மூன்றாம் இடத்திலும் உள்ளன.
ஐரோப்பிய நாடுகளான ஜெர்மனி மற்றும் பிரிட்டனில் இதுவரை இல்லாத அளவிற்கு உயிரிழப்புகள் கடந்த 24 மணிநேரத்தில் பதிவாகியுள்ளன.
இதையும் படிங்க: மிரட்டும் புது கரோனா... திணறும் பிரிட்டன்: ஒரேநாளில் 744 பேர் மரணம்