சர்வதேச அளவில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் கோவிட்-19 இரண்டாம் அலை தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, பிரிட்டன், இத்தாலி, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்துவருகிறது.
தற்போதைய பாதிப்பு நிலவரம்
இதுவரை ஏழு கோடியே 77 லட்சத்து 18 ஆயிரத்து 158 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17 லட்சத்து 09 ஆயிரத்து 011ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஐந்து கோடியே 45 லட்சத்து 93 ஆயிரத்து 404ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஐந்து லட்சத்து 45 ஆயிரத்து 785 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒன்பதாயிரத்து 367 பேர் உயிரிழந்தனர்.
சர்வதேச நாடுகளின் நிலவரம்
உலகளவில் அதிக கரோனா பாதிப்பு அமெரிக்காவில் பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 2 லட்சதுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை அந்நாட்டில் ஒரு கோடியே 84 லட்சத்து 73 ஆயிரத்து 716 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று லட்சத்து 26 ஆயிரத்து 772 பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்காவுக்கு அடுத்தப்படியாக அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இந்தியா இரண்டாம் இடத்திலும், பிரேசில் மூன்றாம் இடத்திலும் உள்ளது. அதேவேளை உயிரிழப்பு அதிகம் கொண்ட நாடுகளின் பட்டியலில் பிரேசில் இரண்டாம் இடத்திலும், இந்தியா மூன்றாம் இடத்திலும் உள்ளது.
சிங்கப்பூர் நாட்டிற்கு கோவிட்-19 பிபைசர் தடுப்பூசி கப்பல் மூலம் வந்து சேர்ந்துள்ளது. இதன்மூலம், பிபைசர் தடுப்பூசிகளை பயன்படுத்தவுள்ள முதல் ஆசிய நாடாக சிங்கப்பூர் உருவெடுத்துள்ளது.
இதையும் படிங்க: உலோகத்தால் கர்ப்பிணிகளுக்கு ஆபத்து - ஆய்வில் திடுக்கிடும் தகவல்