சர்வதேச அளவில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் கோவிட்-19 இரண்டாம் அலை தீவிரமடைந்துவருகிறது. இதுவரை ஆறு கோடியே 41 லட்சத்து 95 ஆயிரத்து 622 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14 லட்சத்து 86 ஆயிரத்து 841ஆக அதிகரித்துள்ளது.
வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை நான்கு கோடியே 44 லட்சத்து 42 ஆயிரத்து 977ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் ஐந்து லட்சத்து 88 ஆயிரத்து 541 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 12 ஆயிரத்து 628 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலக அளவில் அதிக கரோனா பாதிப்பு அமெரிக்காவில் பதிவாகியுள்ளது. இதுவரை அந்நாட்டில் ஒரு கோடியே 41 லட்சத்து எட்டாயிரத்து 490 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு லட்சத்து 76 ஆயிரத்து 976 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவில் பெருந்தொற்று தொடர்ந்து உயர்ந்துவருவதால், மக்கள் பயணங்கள், விழாக்களில் கூடுவது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும் என அந்நாட்டின் தொற்று நோய்க்கு ஆலோசனை வழங்கும் மூத்த வல்லுநர் ஆந்தோணி ஃபாச்சி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இந்தியா இரண்டாம் இடத்திலும், பிரேசில் மூன்றாம் இடத்திலும் உள்ளது. அதேவேளை உயிரிழப்பு அதிகம் கொண்ட நாடுகளின் பட்டியலில் பிரேசில் இரண்டாம் இடத்திலும், இந்தியா மூன்றாம் இடத்திலும் உள்ளது.
பிரேசில் நாட்டில் தற்போது நோய்த்தொற்று எண்ணிக்கை 63 லட்சத்து 88 ஆயிரத்து 526 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு ஒரு லட்சத்து 73 ஆயிரத்து 862 ஆக உள்ளது.
இதையும் படிங்க: கரோனா தடுப்பூசிக்காக மசோதா நிறைவேற்றிய ஜப்பான்