உலகளவில் கரோனா பாதிப்பு தற்போது மூன்றரைக் கோடியை நெருங்கியுள்ளது. இதுவரை உலகளவில் 3 கோடியே 48 லட்சத்து 31 ஆயிரத்து 367 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10 லட்சத்து 33 ஆயிரத்து 238ஆக அதிகரித்துள்ளது. வைரஸிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 58 லட்சத்து 95 ஆயிரத்து 850ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 3 லட்சத்து 51 ஆயிரத்து 812 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், உலகளவில் கரோனா அதிகம் பாதித்த நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தியாவின் கரோனா உயிரிழப்பு ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. அமெரிக்க, பிரேசிலுக்கு அடுத்தபடியாக அதிக உயிரிழப்பைச் சந்தித்த நாடாக இந்தியா உள்ளது.

75 லட்சத்துக்கும் மேற்பட்ட பாதிப்புகளுடன் அமெரிக்கா முதலிடத்தில் உள்ள நிலையில், இந்தியா தற்போது 64 லட்சத்துக்கும் மேற்பட்ட பாதிப்புகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
இதையும் படிங்க: 2025ஆம் ஆண்டுக்குள் நிறுவனத்தில் 50% பெண் ஊழியர்கள்: ட்விட்டர் முடிவு