உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கரோனா வைரஸ் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கடந்தாண்டு இறுதியில் சீனாவில் முதல்முறையாக கண்டறியப்பட்ட இந்த வைரஸ் தற்போது அந்நாட்டில் குறைந்திருந்தாலும் மற்ற நாடுகளில் தீவிரமான நிலையை எட்டியுள்ளது.
அதிலும் குறிப்பாக, அமெரிக்காதான் இத்தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உலகம் முழுவதும் நேற்று புதிதாக 96,364 பேருக்கு கரோனா வைரஸ் இருப்பது மருத்துவ சோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40,13,896ஆக அதிகரித்துள்ளது.
அதேசமயம், இத்தொற்றால் நேற்று உலகம் முழுவதும் 5,515 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதன்மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,76,235ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே, இத்தொற்றிலிருந்து இதுவரை 13,85,412 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இத்தொற்றின் பிறப்பிடமாக கருதப்படும் சீனாவில் நேற்று புதிதாக ஒரு பாதிப்பு மட்டுமே கண்டறியப்பட்டது. இதனால், அந்நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82,887ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் 78,046 பேர் குணமடைந்த நிலையில், 4,633 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், தற்போது சீனாவில் 208 பேர் மட்டுமே சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இந்தியாவைப் பொறுத்தவரையில், இத்தொற்றால் 59,662 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1981 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 17,847 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது கரோனா வைரஸ் அதிகம் பாதித்த முதல் 10 நாடுகளின் பட்டியலை பார்ப்போம்.
நாடுகள் | பாதிப்புகள் | உயிரிழப்புகள் | குணமடைந்தவர்கள் |
அமெரிக்கா | 13,22,163 | 78,616 | 2,23,749 |
ஸ்பெயின் | 2,60,117 | 26,299 | 1,68,408 |
இத்தாலி | 2,17,185 | 30,201 | 99,023 |
பிரிட்டன் | 2,11,364 | 21,241 | அறிவிப்பு இல்லை |
ரஷ்யா | 1,87,859 | 1,723 | 26,608 |
பிரான்ஸ் | 1,76,079 | 26,230 | 55,782 |
ஜெர்மனி | 1,70,588 | 7,510 | 1,43,300 |
பிரேசில் | 1,46,894 | 10,017 | 59,297 |
துருக்கி | 1,35,569 | 3,689 | 86,396 |
ஈரான் | 1,04,691 | 6,541 | 83,837 |
இதையும் படிங்க: கோவிட்-19 நோயாளி மீது லென்சிலுமாப் மருந்தின் மூன்றாம் கட்ட பரிசோதனை!