புதிய வகை கரோனா வைரஸால் உருவான கோவிட்-19 பெருந்தொற்று நோயிக்கு, உலகம் முழுக்க 35 லட்சத்து 66 ஆயிரத்து 230 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழப்பை பொறுத்தமட்டில் இரண்டு லட்சத்து 48 ஆயிரத்து 285 ஆக உள்ளது. மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் 11 லட்சத்து 54 ஆயிரத்து 31 பேர் வீடு திரும்பியுள்ளனர்.
அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் முதல் வரிசையில் உள்ளன. இந்த நாடுகளில் கடுமையான முழு அடைப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது.
உலகம் முழுக்க கரோனா பாதித்த முதல் 10 நாடுகள்:
நாடுகள் | பாதிப்பு | இழப்பு |
அமெரிக்கா | 11,88,122 | 68,598 |
ஸ்பெயின் | 2,47,122 | 25,264 |
இத்தாலி | 2,10,717 | 28,884 |
இங்கிலாந்து | 1,86,599 | 28,446 |
பிரான்ஸ் | 1,68,693 | 24,895 |
ஜெர்மனி | 1,65,664 | 6,866 |
ரஷ்யா | 1,34,687 | 1,280 |
துருக்கி | 1,26,045 | 3,397 |
பிரேசில் | 1,01,826 | 7,051 |
ஈரான் | 97,424 | 6,203 |
கரோனாவின் தொடக்கப்புள்ளியான சீனாவில் 82 ஆயிரத்து 880 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தனர். அங்கு 4,633 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க: இந்தியாவில் கரோனா பாதிப்பு, மாநிலங்கள் வாரியாக தகவல்!