சீனாவில் முதலில் அறியப்பட்ட கோவிட்-19 வைரஸ் பாதிப்பு, தற்போது 170க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இந்த வைரஸின் தாக்கம் காரணமாக ஐரோப்பிய மற்றும் தென் அமெரிக்க நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக சீனாவை தவிர்த்து இத்தாலி, ஸ்பெயின், ஈரான் உள்ளிட்ட நாடுகள் கடுமையான பாதிப்பை சந்தித்தன. இதற்கிடையில் காட்டுத் தீப் போல் பரவிய கரோனா வைரஸ் அமெரிக்காவை பதம் பார்த்தது.
அவ்வளவு பெரிய நோயாளிகளின் கூட்டத்தை அந்நாடு இதுவரை சந்தித்ததே இல்லையென்ற அளவுக்கு மருத்துவமனை முழுவதும் நோயாளிகளாக காட்சியளித்தனர்.
வயதானவர்கள் மற்றும் வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாத கடின சூழ்நிலைக்கு அந்நாடு தள்ளப்பட்டது.
இந்தியாவை பொறுத்தமட்டில் வைரஸ் பரவலை தடுக்கும் விதத்தில் சமூக இடைவெளி உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது.
எனினும் பத்து ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு 240ஐ கடந்துவிட்டது. ஆக கோவிட்-19 வைரஸூக்கு உலகளாவிய வகையில் இதுவரை 19 லட்சத்து 25 ஆயிரத்து 179 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழப்பு, ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 699 ஆக உள்ளது. நான்கு லட்சத்து 45 ஆயிரத்து 23 பேர் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்துள்ளனர்.
உலக அளவில் புதிய கரோனா வைரஸான கோவிட்-19 பெருந்தொற்று நோயினால் பாதிக்கப்பட்ட முதல் பத்து நாடுகளை பார்க்கலாம்.
நாடுகள் | பாதிப்பு | உயிரிழப்பு |
அமெரிக்கா | 5,87,155 | 23,644 |
ஸ்பெயின் | 1,70,099 | 17,756 |
இத்தாலி | 1,59,516 | 20,465 |
ஃபிரான்ஸ் | 1,36,779 | 14,967 |
ஜெர்மனி | 1,30,072 | 3,194 |
இங்கிலாந்து | 88,621 | 11,329 |
சீனா | 82,249 | 3,341 |
ஈரான் | 73,303 | 4,585 |
துருக்கி | 61,049 | 1,296 |
பெல்ஜியம் | 30,589 | 3,903 |
கரோனா பாதிப்பிலிருந்து விடுபட்ட நாடுகளிலிரும் வைரஸ் பரவல் இருந்துவருகிறது. இன்று சீனாவில் புதிதாக 89 பாதிப்புகள் அறியப்பட்டுள்ளது. தென் கொரியாவில் 27 புதிய பாதிப்பாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.
தென் கொரியாவில் கோவிட்-19 பாதிப்பு பத்தாயிரத்து 564 ஆக உள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 222 ஆகும். கடந்த மூன்று வாரங்களில் தென் கொரியாவில் பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது.