ETV Bharat / international

திருமணம் செய்துகொள்ளப்போன கர்ப்பிணி...வழியில் நடந்த விபரீதம்! - கர்ப்பிணி க்கவாதத்தினால் உயிரிழந்த சம்பவம்

பிரேசில்: திருமணம் செய்துகொள்வதற்காக சென்று கொண்டிருந்த கர்ப்பிணி, பாதி வழியிலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்ப்பிணி
author img

By

Published : Sep 19, 2019, 11:11 AM IST

பிரேசில் நாட்டில் வசித்துவந்த 6 மாத கர்ப்பிணி ஜெஸ்ஸிகா கியூடெஸ், தனது காதலனைத் திருமண செய்துகொள்வதற்காக தேவாலயத்திற்கு காரில் சென்றுள்ளார். பாதி வழியில் திடீரென ஜெஸ்ஸிகாவுக்கு பின் கழுத்தில் வலி ஏற்பட்டு, ஒரு பக்க கை கால் செயலிழந்து காரிலேயே மயங்கி விழுந்துள்ளார். இதனை யாரும் அறியாததால், கார் தேவாலயத்தைச் சென்றடைந்தது. அப்போது கான்கல்வெஸ்-க்கு ஏற்பட்டிருந்த நிலையைக் கண்டு அதிர்ந்த அவரது காதலன் ஃபிலேவியோ, தீயணைப்புத் துறையில் பணியாற்றும் அனுபவத்தால் உடனடியாக முதலுதவி செய்தார்.

இதனையடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற ஜெஸ்ஸிகாவை பரிசோதித்த மருத்துவர்கள் ப்ரீகிளாம்சியா என்னும் நோயால் பாதிக்கப்பட்ட ஜெஸ்ஸிகா முளைச் சாவு அடைந்துள்ளதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை மருத்துவர்கள் போராடிக் காப்பாற்றினர். ஆறு மாதங்களிலேயே குழந்தை எடுக்கப்பட்டதால் தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைத்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்துப் பேசிய ஜெஸ்ஸிகாவின் காதலன், சற்றுமுன்பு வரை மகிழ்ச்சியோடு இருந்த தனது காதலிக்கு சில நிமிடங்களில் நேர்ந்த கொடுமையை தன்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை என வேதனை தெரிவித்தார். திருமணத்திற்கு சில நிமிடங்கள் முன்பு, மணப்பெண் இறந்த சம்பவம் அதிர்ச்யையும், பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : இளம்பெண் உயிரைப் பறித்த செல்போன் - குளிக்கும்போது நடந்த விபரீதம் !

Intro:Body:

Girl Died  Before Wedding

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.