அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரில், ஜார்ஜ் ஃளாப்ய்ட் என்ற கறுப்பினத்தவரை டெரிக் சாவின் என்ற காவலர், சுமார் எட்டு நிமிடம் 56 நொடிகள் முழங்காலால் அழுத்தி, கொடூரமான முறையில் கொலைசெய்த சம்பவம் உலகையே உலுக்கியது.
இந்த நிகழ்வுக்கு நீதி கேட்டு அமெரிக்கா மட்டுமில்லாது உலகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள நிலையில், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரான ஜோ பிடன், ஜார்ஜ் ஃப்ளாய்ட்டின் உறவினர்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
இந்தக் குற்றச்சம்பவத்தில் ஈடுபட்ட காவலர், தற்போது மினிசோடா மாகாணத்தில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது கொலை வழக்கின் கீழ் குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட்டுள்ள நிலையில், தனக்குப் பிணை கேட்டு, நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதன்படி, நிபந்தனையற்ற பிணைக்காக இந்திய மதிப்பில் சுமார் 10 கோடி ரூபாய் தொகை வழங்கத் தயார் என டெரிக் சாவினின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் விசாரணையை வரும் 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
இதையும் படிங்க: நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் வின்ஸ்டன் சர்ச்சில் சிலை சூறையாடல்