கனடாவிலிருந்து அமெரிக்காகவுக்கு மசேனா வழியாக நேற்று வாகனம் ஒன்று நுழைய முயன்றது. அதை மசேனாவிலுள்ள சோதனைச் சாவடி அலுவலர்கள் தடுத்து நிறுத்தி பரிசோதித்தனர். அதில் நான்கு பேர் உரிய ஆவனங்களின்றி அமெரிக்காவுக்குள் நுழைய முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டனர். இதேபோல மற்றொரு வானகத்தில் வந்த இருவரையும் உரிய ஆவனங்கள் இல்லாததால் காவல் துறையினர் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், முதல் வாகனத்தில் வந்தவர்கள் அனைவரும் இந்தியர்கள் என்பது தெரியவந்தது. இரண்டு வாகனத்தையும் ஓட்டிவந்த ஒட்டுநர்கள் மீது ஆள்கடத்தல் பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து மாசேனா சோதனை சாவடி அலுவலர் ஒருவர் கூறுகையில், "சமீப காலங்களாக சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது" என்றார்.
இதையும படிங்க: இத்தாலியைத் துரத்தும் கொரோனா!