சவுதி அரேபியா அரசுக்குச் சொந்தமான இரண்டு முக்கிய கச்சா எண்ணெய் ஆலைகள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தினர். இதனால் அந்த எண்ணெய் ஆலைகளில் தீ கொழுந்துவிட்டு எரிந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
இந்த தாக்குதலால் கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயர வாய்ப்புள்ளாதால், அமெரிக்காவில் அவசரக் கால கையிருப்பு பெட்ரோலை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விநியோகிக்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.