லெபனான் நாட்டில் உள்ள பெய்ரூட் நகரில் கடந்த 4ஆம் தேதி ஏற்பட்ட கோர வெடிவிபத்தில் இதுவரை 180 பேர் உயிரிழந்துள்ளனர். அங்குள்ள துறைமுகத்தில் வைக்கப்பட்டிருந்த 3 ஆயிரம் டன் அமோனியம் நைட்ரேட் வெடிபொருள் வெடித்ததில் ஒட்டுமொத்த நகரமே சேதமடைந்தது.
இந்த கோர விபத்தால் பெரும் பாதிப்பைச் சந்திதுள்ள, அந்நகரை சீரமைக்க உலக நாடுகள் தங்கள் உதவிக்கரத்தை நீட்டியுள்ளன. இந்தச் சம்பவத்திற்கு பொறுப்பேற்று அந்நாட்டின் அரசு ராஜினாமா செய்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து வெளிப்படையான விசாரணை நடைபெறும் என லெபனான் உயர் அலுவலர்கள் உறுதியளித்திருந்தனர். இந்நிலையில், அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்கிறது. எஃப்.பி.ஐ. அமைப்பைச் சேர்ந்த அதிகாரிகள் குழு தற்போது லெபனான் சென்றுள்ளது.
இந்த குழு அங்குள்ள கள நிலவரத்தை ஆராய்ந்து முழு விவரத்தையும் மைய விசாரணை அமைப்பிற்கு அனுப்பவுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், இந்த சம்பவம் தொடர்பான விசாரணைக்கு பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளும் விசாரணை அதிகாரிகளை லெபனானுக்கு அனுப்பியுள்ளது.
இதையும் படிங்க: இலங்கை வெளியுறவுத்துறை செயலராக முன்னாள் ராணுவ அலுவலர் நியமனம்