ETV Bharat / international

"நாங்கள் ஆதிக்கம் செலுத்துகிறோமா? நிச்சயம் இல்லை" - ஆப்பிள் சிஇஓ

நாடாளுமன்ற விசாரணைக் குழு முன் ஆஜரான ஆப்பிள், ஃபேஸ்புக் ஆகிய நிறுவனங்களின் தலைமை செயல் அலுவலர்கள் வாக்குமூலங்களை அளித்தனர்.

Facebook and Apple CEO testimony
Facebook and Apple CEO testimony
author img

By

Published : Aug 1, 2020, 11:09 AM IST

அமெரிக்காவின் டெக் துறையில் வெகு சில நிறுவனங்கள் மட்டுமே பெரும் ஆதிக்கத்தை செலுத்துவதாகவும், பிற நிறுவனங்களின் வளர்ச்சியை இந்நிறுவனங்கள் தடுப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இது தொடர்பாக அமெரிக்காவில் டெக் துறையில் மிகப் பெரிய நான்கு நிறுவனங்களான கூகுள், ஆப்பிள், ஃபேஸ்புக், அமேசான் ஆகிய நிறுவனங்களிடம் அந்நாட்டின் நாடாளுமன்ற விசாரணைக் குழு கடந்தாண்டு ஜூன் மாதம் முதல் விசாரணை நடத்திவருகிறது.

இந்நிலையில், இது தொடர்பாக நடைபெற்றுவரும் விசாரணைக்கு இந்நிறுவனங்களின் தலைமைச் செயல் அலுவலர்கள் தங்கள் வாக்குமூலத்தை அளிக்க வேண்டும் என்று அமெரிக்க நாடாளுமன்றம் சமீபத்தில் நோட்டீஸ் அனுப்பியது.

அதன்படி, ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் டிம் கூம் குக் எழுத்து மூலம் சமர்பித்த தனது வாக்குமூலத்தில், "சாம்சங், எல்ஜி, ஹவாய், கூகுள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுடன் ஸ்மார்ட்போன் உற்பத்தி சந்தையில் நாங்கள் போட்டியிடுகிறோம்.

எந்த துறையிலும் ஆப்பிள் நிறுவனத்திற்கு ஆதிக்கம் செலுத்தும் அளவுக்கு சந்தை பங்கு இல்லை" என்றார்.

Facebook and Apple CEO testimony
ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் டிம் கூம் குக் வாக்குமூலம்

அதேபோல, இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் நிறுவனங்களை வாங்கியது குறித்து ஃபேஸ்புக்கின் மார்க் ஜுக்கர்பெர்க், நாங்கள் இரு செயலிகளையும் வெற்றிகரமான செயலிகாளாக மாற்றியுள்ளோம்.

மேலும், ஃபேஸ்புக்கில் பல புதிய வசதிகளை ஏற்படுத்த இந்த நிறுவனங்களை கையகப்படுத்தியது எங்களுக்கு உதவியது. மக்களுக்கும் விளம்பரதாரர்களுக்கும் சிறந்த சேவையை அளிக்க வேண்டும் என்பதே எங்கள் கோள்கை, அது இந்நிறுனங்களை வாங்கியதன் மூலம் நிறைவேறியுள்ளது" என்றார்.

Facebook and Apple CEO testimony
ஃபேஸ்புக்கின் மார்க் ஜுக்கர்பெர்க் வாக்குமூலம்

இதையும் படிங்க: எட்டு தொழிற்துறையின் உற்பத்தி 15 விழுக்காடு வரை சரிவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.