கிழக்கு லடாக்கின் பான்காங் சோ ஏரியில் சீனா ராணுவத்தினர் அத்துமீறலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் எல்லைப் பகுதியில் இந்தியா ராணுவத்தினரும் குவிந்துள்ளனர். பதற்றம் அதிகமாகிய நிலையில், பிரதமர் மோடி முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினர்.
இதனிடையே சீன அதிபர் ஜி ஜிங்பிங், சீன வீரர்கள் போருக்கு தயாராக இருக்க வேண்டும் என பேசினார். இதனால் பதற்றம் இன்னும் அதிகமாகியது.
இதனைத்தொடர்ந்து இந்தியா - சீனா இருநாடுகளுக்கிடையே மத்தியஸ்தம் செய்ய அமெரிக்க தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்தார். இதற்கு இருநாட்டு தலைவர்களும் மூன்றாம் நாட்டின் மத்தியஸ்தம் தேவையில்லை, எங்கள் எல்லைப் பிரச்னைகளை நாங்களே பார்த்துக்கொள்கிறோம் என அறிவித்தனர்.
இந்நிலையில் பாதுபாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் மார்க் டி எஸ்பெரிடன் தொலைபேசி வாயிலாக பேசியுள்ளார். அந்த உரையாடலில், ''இந்த நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கு ஒரு நாடுகளும் தற்போது உள்ள வழிமுறைகளையே பின்பற்றவுள்ளோம்'' எனக் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆனால் பாதுகாப்புத்துறை சார்பாக அளிக்கப்பட்டுள்ள அறிக்கையில், ''இருநாட்டின் வளர்ச்சிப் பணிகள், பாதுகாப்பு மற்றும் ராணுவத்தைப் பலப்படுத்துவதற்கான திட்டங்கள் பற்றி ஆலோசிக்கப்பட்டது'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'எல்லைத் தகராறுகளை பாஜக முற்றிலும் தீர்க்க வேண்டும்' - ராகுல் காந்தி