ETV Bharat / international

பிட் காயினை சட்டப்பூர்வமாக்கிய உலகின் முதல் நாடு!

மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான எல் சால்வடார், தற்போது பிட் காயினை சட்டப்பூர்வமாக்கிய முதல் நாடாக உருவெடுத்துள்ளது. இதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் வளரும் என்றும், வேலைவாய்ப்புகள் பெருகும் என்றும் அந்நாட்டு அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

author img

By

Published : Jun 9, 2021, 8:35 PM IST

பிட்காயின்
பிட்காயின்

கிரிப்டோகரன்ஸியான பிட் காயினை மத்திய அமெரிக்க நாடுகளில் சட்டப்பூர்வமானதாக்கும் மசோதாவுக்கு தங்கள் நாடு ஒப்புதல் அளித்துள்ளதாக எல் சால்வடார் நாட்டின் அதிபர் நயீப் புக்கேல் இன்று (ஜூன்.09) அறிவித்துள்ளார்.

பிட் காயினை சட்டப்பூர்வமாக்கிய முதல் நாடு

மொத்தம் ஏழு நாடுகளை உள்ளடக்கிய மத்திய அமெரிக்க நாடுகளில் அங்கம் வகிக்கும் எல் சால்வடார், தற்போது பிட்காயின் சட்டப்பூர்வமாக்கிய முதல் நாடாக இதன் மூலம் உருவெடுத்துள்ளது.

”பிட்காயின் சட்டத்தை சால்வடோர் காங்கிரஸ் கட்சியின் பெரும்பாலோனார் ஆதரித்துள்ளனர். 84 வாக்குகளில் மொத்தம் 62 வாக்குகள் செலுத்தப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது" என இது குறித்து நயீப் புக்கேல் ட்வீட் செய்துள்ளார்.

புளோரிடாவின் மியாமியில் முன்னதாக, ஜூன் 5ஆம் தேதி நடந்த பிட்காயின் - 2021 மாநாட்டில் முன்னதாக பிட்காயினை சட்டப்பூர்வமாக்குவதற்கான அறிவிப்பை புக்கேல் முன்வைத்தார்.

’பொருளாதாரம் வளரும், வேலை வாய்ப்புகள் உருவாகும்’

இந்நிலையில், "இதன் மூலம் குறுகிய காலத்தில் பல வேலைகள் உருவாகும் மேலும், ஆயிரக்கணக்கானவர்களுக்கு நிதி சேமிக்கும் கருவியாகவும் இது உதவும்" என்றும் புக்கேல் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்

எல் சவடேரோ நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 70 விழுக்காட்டிற்கும் மேலானோர் வங்கிக் கணக்குகள் இல்லாமல் வாழ்ந்து வரும் நிலையில், இந்த அறிவிப்பு மக்களின் சேமிப்பு மற்றும் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் எனவும் நம்பப்படுகிறது.

பிட் காயின் என்றால் என்ன?

நேரடி பணப்பரிமாற்றத்தில் புழங்க முடியாததும், மின்னணு பரிவர்த்தனைகளில் மட்டுமே பயன்படுத்தப்படக்கூடியதுமான கரன்சி வகையைச் சேர்ந்த கிரிப்டோகரன்சிக்களில் ஒன்று ’பிட் காயின்’ ஆகும்.

இந்தியர்களின் பிட் காயின் குறித்த செயல்பாடு குறித்து பேசிய ’பய் யு காயின்’ நிறுவனர் ஷிவம் தக்ரல், “கிரிப்டோ குறித்த இந்தியர்களின் அணுகுமுறை வித்தியாசமானது. இது இங்கே சட்டப்பூர்வமானது இல்லை எனினும், ஒரு சொத்து மதிப்பாகவே இது உணரப்படுகிறது. பிட் காயினின் பரிசில் மிகப்பெரும் ஏற்றத்தாழ்வுகள் நிலவியபோதும், இந்தியர்கள் பிட் காயின் மீது நம்பிக்கை கொண்டு முதலீடு செய்தே வந்துள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் பிட் காயின்

இந்தியாவில் பிட் காயின் சட்டப்பூர்வமானது அல்ல. முன்னதாக ரிசர்வ் வங்கி, பிட் காயினை பணப்பரிவர்த்தனைக்கு உபயோகப்படுத்தக் கூடாது எனத் தெரிவித்திருந்த நிலையில், கிரிப்டோ கரன்சி குறித்த எந்த ஒரு சட்டமும் இந்தியாவில் இல்லாததால் இவ்வாறு ரிசர்வ் வங்கி சொல்ல முடியாது என உச்ச நீதிமன்றம் அதற்கு பதில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.