கரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் பல உலக நாடுகள் திணறி வருகின்றன. தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துவருகின்றனர். அந்த வகையில், பிரேசில் நாட்டின் மிகவும் முக்கியமான மனாஸ் பகுதியில் கரோனா தாக்கம் அதிகளவில் உள்ளது. இதுவரை அப்பகுதியில் 2 ஆயிரத்திற்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டது மட்டுமின்றி 172 பேர் உயிரிழந்துள்ளனர்.
கரோனாவால் உயிரிழந்தவர்களை புதைப்பதில் இடப்பற்றாக்குறையும், மக்களுக்கு அச்சமும் ஏற்பட வாய்ப்புள்ளதை தொடர்ந்து, பொது இடத்தில் கல்லறை அமைத்து சவப்பெட்டிகளை புதைப்பதற்கு அந்நாட்டு அரசு அனுமதி அளித்தது.
இதைத் தொடர்ந்து, நோசா சென்ஹோரா டி அபரேசிடா( Nossa Senhora de Aparecida) கல்லறையின் ஒரு பகுதியில் பிரமாண்ட குழியை தோண்டி சவப்பெட்டிகளை புதைத்து வருகின்றனர். உறவினர்கள், நண்பர்கள் என பலரும் மாஸ்க் அணிந்து உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துகின்றனர்.
இதுவரை, பிரேசில் நாட்டில் 43 ஆயிரம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 2 ஆயிரத்தி 700ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கரோனா அச்சுறுத்தல்: பணிக்குத் திரும்பிய நிறைமாத கர்ப்பிணி