ETV Bharat / international

அதிபர் தேர்தல் குறித்து ட்ரம்பின் கருத்தால் பரபரப்பு - அமெரிக்க அதிபர் தேர்தல்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலை தள்ளிப்போட விரும்பவில்லை நியாயமாக நடத்தவே வலியுறுத்துகிறேன் என அதிபர் டொனால்டு ட்ரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.

Trump
Trump
author img

By

Published : Jul 31, 2020, 9:18 AM IST

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் களம் தற்போது சூடு பிடித்துள்ளது. ஜனநாயக கட்சியின் சார்பில் ஜோ பிடனும் குடியரசு கட்சியின் வேட்பாளராக அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்பும் போட்டியிடுகின்றனர்.

உலகளாவிய கரோனா தாக்கம் அமெரிக்காவில் தீவிரமடைந்துள்ளதால், அங்கு தேர்தல் நடத்துவதில் நடைமுறைச் சிக்கல் எழுந்துள்ளது. கரோனா தொற்றால் வயதானவர்கள் நேரில்வந்து வாக்களிக்க முடியாமல் தபால் வாக்கு செலுத்தள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த தபால் வாக்குமுறை மூலம் குளறுபடி நடைபெற்று தேர்தல் முடிவுகள் மாற வாய்ப்புள்ளது என அதிபர் ட்ரம்ப் அச்சம் தெரிவித்து, தேர்தலை தள்ளிவைக்க விரும்பம் தெரிவித்தார். அதிபரின் இந்தக் கருத்து சலசலப்பை ஏற்படுத்தியதும், ட்ரம்ப் அதிலிருந்து உடனடியாக பின்வாங்கினார்.

இது குறித்து அவர் கூறுகையில், தேர்தலை தள்ளிவைப்பதில் எனக்கு விருப்பமில்லை. அதேவேளை வாக்கு செலுத்திய அன்றே வாக்கு எண்ணிக்கை நடைபெற வேண்டும் என்பதே எனது கருத்து. இல்லையென்றால் எண்ணிக்கையின் போது முறைகேடு நடைபெற்று நியாயமான முடிவுகள் வராது என்றார்.

இதையும் படிங்க: மூழ்கும் அமெரிக்க பொருளாதாரம், 33 சதவீதம் சரிவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.