அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 3ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான பரப்புரையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பும், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடனும் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். சமீபத்தில் ட்ரம்ப்பும், ஜோ பிடனும் நேருக்கு நேர் மோதிய முதல் விவாதமானது செப்டம்பர் 29ஆம் தேதி தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.
இந்த விவாதத்திற்குப்பின் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பிற்கும் அவரது மனைவி மெலனியாவுக்கும் கரோனா வைரஸ் தொற்று இருப்பது கடந்த 2ஆம் தேதி கண்டறியப்பட்டது. பின்னர், ராணுவ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட ட்ரம்ப் நான்கு நாட்களுக்குப்பிறகு கடந்த 5ஆம் தேதி வெள்ளை மாளிகைக்குத் திரும்பினார்.
இந்நிலையில் தனக்கு கரோனா பாதித்தது குறித்து குறிப்பிட்டுள்ள ட்ரம்ப், 'கரோனா வைரஸ் தொற்று இருந்தது கடவுளின் வரம். அதுமட்டுமின்றி இதனை கடவுளின் மறைமுக ஆசியாக நான் கருதுகிறேன். கரோனா எனக்கு வந்தது மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களின் துயரை அறிய முடிந்தது' எனக் குறிப்பிட்டுள்ளார்.
-
A MESSAGE FROM THE PRESIDENT! pic.twitter.com/uhLIcknAjT
— Donald J. Trump (@realDonaldTrump) October 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">A MESSAGE FROM THE PRESIDENT! pic.twitter.com/uhLIcknAjT
— Donald J. Trump (@realDonaldTrump) October 7, 2020A MESSAGE FROM THE PRESIDENT! pic.twitter.com/uhLIcknAjT
— Donald J. Trump (@realDonaldTrump) October 7, 2020
இதையும் படிங்க...கரோனாவைக் கண்டு அஞ்ச வேண்டாம் - மாஸ்க்கை கழற்றி மாஸ் காட்டிய டொனால்ட் ட்ரம்ப்!