சிலி நாட்டின் அண்டோபகாஸ்டா பகுதியில் 8 மாத பெண் நாய்க் குப்பைத் தொட்டி அருகே உணவுத் தேடிக் கொண்டிருக்கிறது. அப்போது அங்குக் கிடந்த பழைய டயரை எடுத்து ஜாலியாக விளையாட ஆரம்பித்தது. இந்நிலையில் நாய் தலையினால் டயரை முட்டும் போது நடுப் பகுதியில் சிக்கிக் கொண்டது. பின்னர் உடனடியாக வெளியே வரப் போராடிக் கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் வலி தாங்க முடியாமல் நாய் கத்த ஆரம்பித்தது.
இதனைப் பார்த்த அருகிலிருந்தவர்கள் உடனடியாக ஓடி சென்று நாயை வெளியே எடுக்க முயற்சி செய்ததும் தோல்வியில் தான் முடிந்தது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சேவைப்பிரிவினர், நாயைக் காப்பாற்றும் முயற்சியை மேற்கொண்டனர்.
![dog face at tyre](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4506372_dog-save.jpg)
டயரில் மாட்டிருக்கும் நாயின் தலையைச் சுற்றி பெட்ரோலியம் ஜெல்லை தடவினர். அதன் பின் பொறுமையாக நாயின் முகத்தை இடது புறமும், வலது புறமும் அசைத்தனர். இறுதியில் நாயின் முகத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே எடுத்துக் காப்பாற்றினர் . இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: கைப்பையில் கடத்திவரப்பட்ட 5 மாதக் குழந்தை!