உலக மக்கள்தொகை பெருக்கம் குறித்து 'Our world data' என்ற ஆய்வு நிறுவனம் ஆய்வறிக்கை ஒன்றைத் தயாரித்துள்ளது. அதன் முக்கியத் தகவல்களும் புள்ளிவிவரங்களும் தொகுப்பாக கொடுக்கப்பட்டுள்ளன.
சுவாரஸ்ய தகவல்கள்:
கடந்த 12 ஆயிரம் ஆண்டுகளில் உலக மக்கள்தொகை சுமார் ஆயிரத்து 860 மடங்கு அதிகரித்துள்ளது. இந்த வளர்ச்சியானது கடந்த சில காலகட்டங்களில்தான் பெருமளவு ஏற்பட்டுள்ளது. 19ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் உலக மக்கள்தொகை இந்தியாவின் தற்போதைய மக்கள்தொகையை விட குறைவாகத்தான் இருந்துள்ளது. அதன்பின்னர் இந்த அளவானது ஏழு மடங்கு அதிகரித்துள்ளது.
மக்கள்தொகை பட்டியலில் டாப் 5 நாடுகள்
- சீனா - 142 கோடி
- இந்தியா - 137 கோடி
- அமெரிக்கா - 32.9 கோடி
- இந்தோனேசியா - 26.9 கோடி
- பிரேசில் - 21.2 கோடி
மக்கள்தொகை நெருக்கம் அதிகம் கொண்ட நாடுகள் பட்டியலில் வங்கதேசம் முதலிடத்தில் உள்ளது. புள்ளிவிவரத்தின்படி முதலிடத்தில் உள்ள வங்கதேசத்தில் ஒரு சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்கு ஆயிரத்து 252 மக்கள் வசிக்கின்றனர். அதன்படி, முதல் ஐந்து நாடுகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
இடங்கள் | நாடுகள் | மக்கள் தொகை (சதுர கிலோமீட்டருக்கு) |
1 | வங்கதேசம் | 1,252 |
2 | லெபனான் | 595 |
3 | தென்கொரியா | 528 |
4 | நெதர்லாந்து | 508 |
5 | ருவாண்டா | 495 |
குறைந்த மக்கள்தொகை நெருக்கம் கொண்ட முதல் ஐந்து நாடுகள் முறையே கிரீன்லாந்து, மங்கோலியா, நமீபியா, ஆஸ்திரேலியா, ஐஸ்லாந்து ஆகியவை உள்ளன.