அமெரிக்கா, கனடா உள்ளிட்ட 35 உலக நாடுகளுக்கிடையே 2002ஆம் ஆண்டு கையெழுத்தான சர்வதேச பாதுகாப்பு ஒப்பந்தம் 'ஓமன் ஸ்கைஸ்'.
இந்த ஒப்பந்தத்திலிருந்து தன்னிச்சையாக வெளியேறியுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புக்கு ஜனநயாகக் கட்சியினர் (எதிர்க்கட்சி) கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் மைக்கேல் பாம்பியோ, பாதுகாப்புத் துறை அமைச்சர் மார்க்எஸ்பருக்கு ஜனநாயகக் கட்சியினர் எழுதியுள்ள கடிதத்தில், "நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கேட்காமல் அரசாங்கம் எடுத்துள்ள இந்த முடிவு தேசியப் பாதுகாப்பு அதிகார சட்டத்தின் 1234 பிரிவுக்கு எதிராக உள்ளது.
சட்டப்படி இதுபோன்ற அறிவிப்பை வெளியிடுவதற்கு முன் 120 நாள்களுக்கு முன்னரே நாடாளுமன்றத்துக்குத் தெரிவித்திருக்க வேண்டும். ஆனால், இதுவரை அதுபோன்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எந்த ஒரு தொலைநோக்கு பார்வையுமின்றி இந்த முடிவை அமெரிக்க அரசு எடுத்துள்ளது. இது வறுத்தத்திற்குரியது, பெரும் விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது.
இதனை அமெரிக்க அரசு கைவிட வேண்டும்" எனக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : தடுப்பூசி திட்டங்களில் காலதாமதம்... ஆபத்தில் 80 மில்லியன் குழந்தைகள் - எச்சரிக்கும் WHO