அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியில் கலந்துகொள்ளும் வகையில் ஜனநாயக கட்சியின் சார்பில் முதல்கட்ட பரப்புரையில் ஈடுபட்டிருந்தவர் தொழில்நுட்ப வல்லுனர் ஆண்ட்ரூ யாங். இவர் நேற்று இந்தப் போட்டியிலிருந்து வெளியேறினார்.
இதனை அவரே தெரிவித்தார். தனது ஆதரவாளர்கள் மத்தியில் அவர், "நாம் இன்னும் பெரிய வேலைகள் செய்யவேண்டும். நான் ஒரு கணித பையன் என்று உங்களுக்குத் தெரியும். இந்த பந்தயத்தில் நாம் வெல்லப் போவதில்லை.
இதனை தரவுகள் உறுதிப்படுத்துகின்றன. ஆகவே பரப்புரையை நிறுத்திக் கொள்கிறேன்” என்றார். இதனைக் கேட்டு அங்கிருந்த ஆதரவாளர் ஒருவர் கண்கலங்கினார். அவர், “நாங்கள் உன்னை நேசிக்கிறோம்” ஆண்ட்ரூ என்று கத்தினார்.
தொடர்ந்து ஆண்ட்ரூ தனது ஆதரவாளருக்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அதில், “இந்த பிரச்சாரத்தில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இங்கு வந்த அனைவருக்கும் நன்றி” எனக் கூறியுள்ளார். யாங் இரண்டு சதவீத வாக்குகள் மட்டுமே பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.