நியூசிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சுற்றுலாத் தளமான ஒயிட் தீவில் உள்ள எரிமலை டிசம்பர் 9ஆம் தேதி வெடித்தது. இதில், சுற்றுலாப் பயணிகள் 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து நிகழ்விடம் சென்ற அந்நாட்டு மீட்புப் படையினர், படுகாயமடைந்த 25க்கும் மேற்பட்டோரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
![volcano eruption](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/5462706_6.jpg)
பாதிக்கப்பட்ட சுற்றுலாப் பயணிகள் கடந்த இரண்டு வாரங்களாக நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், பலன் அளிக்காமல் ஆறு பேர் நேற்று (டிச.22) உயிரிழந்தனர். இதன்மூலம், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19ஆக உயர்ந்துள்ளது.
![volcano eruption](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/5462706_2.jpg)
இது தொடர்பாக நியூசிலாந்து காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, ஒயிட் தீவில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பில் படுகாயமடைந்தவர்களில் ஆறு பேர், மிடில்மோர் மருத்துவமனையில் நேற்று இரவு உயிரிழந்தனர். தற்போது, மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களில் அமெரிக்காவைச் சேர்ந்த லாரன் யூரே - மத்தேயு யூரே என்ற புதுமண தம்பதியும் அடங்குவர்.
![volcano eruption](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/5462706_4.jpg)
ஒயிட் தீவில் நில அதிர்வு ஏற்படும் என்று நியூசிலாந்தின் ஜியோநெட் நில அதிர்வு கண்காணிப்பு நிறுவனம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், அங்கு சுற்றுலாப் பயணிகள் ஏன் அனுமதிக்கப்பட்டனர் என்று பலர் கேள்வி எழுப்புகின்றனர். அது தொடர்பாக நியூசிலாந்து அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பற்றியெரியும் ஆஸ்திரேலியா: சுற்றுலா சென்றதற்கு மன்னிப்பு கேட்ட பிரதமர்!