மத்திய அமெரிக்க தீவு நாடான கியூபாவில் பிடல் காஸ்ட்ரோ ஆட்சியில் இருந்தபோது 1976ஆம் ஆண்டு அந்நாட்டு வழக்கிலிருந்து பிரதமர் பதவி நீக்கப்பட்டது.
இந்நிலையில், 43 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பிரதமர் பதவியை கொண்டு வரும் வகையில், கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி அந்நாட்டு நாடாளுமன்றத்தில் புதிய அரசியல் சாசன சட்டம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து, நீண்டகாலமாக சுற்றுலாத் துறை அமைச்சராக செயல்பட்டு வரும் மனுவல் மரீரோ க்ரூஸ், ஏகமனதாக அந்நாட்டின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க : தலை சுற்ற வைக்கும் சுந்தர் பிச்சையின் சம்பளம்!