நாடு முழுவதும் தற்போது கரோனா தொற்று பாதிப்பால் அவதிப்பட்டு வரும் நிலையில், கரோனா தொற்று பல்வேறு உருமாற்றங்களை அடைந்து உலகம் முழுவதும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
அதாவது டெல்டா, டெல்டா பிளஸ் என அடுத்தடுத்த வடிவங்களைக் கொண்டு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் Omicron என்ற புதுவகை உருமாறிய கரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது.
தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட இந்த ‘ஒமைக்ரான்’ என்ற உருமாறிய புதிய வகை கரோனா தொற்று உலகம் முழுவதும் வேகமாகப் பரவக்கூடியது என்பதால், இதுகுறித்து உலகம் முழுவதும் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
ஒமைக்ரான் பரவல்
இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவிலிருந்து பெங்களூரு வந்தடைந்த இரு பயணிகளுக்கு நேற்று (நவ. 27) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இவர்களுக்கு ஒமைக்ரான் இருக்கிறதா என்ற பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவர்களுக்கு ஒமைக்ரான் இல்லை என முடிவுகள் வந்தன.
இதனைத் தொடர்ந்து இங்கிலாந்திலும் கரோனா பரவி வருவதால் ஒமைக்ரான் குறித்து அச்சம் எழுந்துள்ளது.
இது குறித்து இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, 'தொடக்க நிலையில், புதிய வகை கரோனாவை பற்றி நமக்கு அதிகம் தெரியாது. எனினும் கூட, நம்முடைய விஞ்ஞானிகள் அடுத்தடுத்து அதுபற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.
Omicron மிக விரைவாகப் பரவி வருகிறது எனத் தெரிய வந்துள்ளது. இரண்டு தடுப்பூசிகளை எடுத்து கொண்டவர்கள் இடையேயும் இந்த வைரஸானது பரவக் கூடும்' எனக் கூறினார்.
இதையும் படிங்க: டிராக்டர் பேரணி ரத்து; ஆனாலும் விடமாட்டோம் - விடப்பிடியாய் நிற்கும் விவசாயிகள்!