ETV Bharat / international

வூஹானில் இருந்தே கரோனா பரவியது: அமெரிக்க குடியரசு கட்சி - அமெரிக்க குடியரசுக் கட்சி

சீனாவில் உள்ள வூகான் இன்ஸ்டிட்யூட் ஆஃப் வைராலஜி என்னும் ஆய்வகத்தில் மரபணு மாற்றப்பட்ட வைரஸிலிருந்து கரோனா தொற்று நோய் உருவானது என அமெரிக்க நாடாளுமன்றத்தை சேர்ந்த குடியரசு கட்சியினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

வூகானில் இருந்தே கரோனா பரவியது
வூகானில் இருந்தே கரோனா பரவியது
author img

By

Published : Aug 3, 2021, 7:39 AM IST

இதுகுறித்து அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் மைக்கேல் மேக்கௌல் வெளியிட்டுள்ள அரிக்கையில், "கரோனா தொற்றின் தோற்றம் குறித்து நாங்கள் தொடர்ந்து ஆராய்ந்துவருவதிலிருந்து அது வெட் மார்கெட்டிலிருந்து உருவானது என்ற கருத்தை முற்றிலுமாக நிராகரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என நான் நம்புகிறேன்.

ஏனெனில் இந்த அறிக்கைபடி, பெரும்பான்மையான ஆதாரங்கள் நம்மை வூஹான் ஆய்வகத்திற்கே அழைத்துச் செல்கின்றன" என குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் Gain-of-function எனப்படும் கிருமிகளை அதிகமாகப் பரப்ப செய்யும் ஆய்வு ஒன்று பாதுகாப்பற்ற சூழலில் நடைபெற்று வந்ததையும் சுட்டிக்காட்டியது.

கரோனா தொற்று வூஹான் ஆய்வகத்தில் இருந்து தோன்றியது என்ற தகவல் வெளியானதை அடுத்து உலகெங்கிலும் உள்ள பல ஆராய்ச்சியாளர்கள் கரோனாவின் பின்னணி, தோற்றம் குறித்தான விசாரணையை புதிதாக தொடங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நிர்வாகத்தின் தரப்பிலும் உளவுத்துறை அமைக்கப்பட்டு கரோனா தோற்றம் குறித்து விசாரணை செய்து செப்டம்பர் மாதத்துக்குள் அறிக்கை சமர்பிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும் சீன அரசு இந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்து, வெட் மார்கெட்டிலிருந்தே விலங்குகளிடமிருந்து, மனிதர்களுக்கு தொற்று பரவியதாக அழுத்தம் திருத்தமாக கூறிவருகிறது.

இதற்கிடையில் கரோனா தொற்று 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பரவ தொடங்கியதாக கூறப்பட்ட நிலையில் அது ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்திலேயே பரவ தொடங்கியது என குடியரசு கட்சியினரின் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 18 மாகாணங்களில் டெல்டா வகை கரோனா... கடுமையாகும் கட்டுப்பாடுகள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.