உலகை அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் நிலைகுலைந்துள்ள அமெரிக்கா மிகப்பெரும் உயிரிழப்புகளையும், பொருளாதார இழப்புகளையும் சந்தித்துவருகிறது.
இந்நிலையில், அமெரிக்க அமைச்சரவை கூட்ட உறுப்பினர்கள் சிலர் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், வேலைவாய்ப்பின்மையைத் தடுக்கவும் சில முக்கிய நடவடிக்கைகளை அமல்படுத்துமாறு அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
அதில், கரோனா பெருந்தொற்றின் காரணமாக நமது நாட்டின் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது, தொழிலாளர் துறையின் புள்ளி விவரங்களின்படி, 302 மில்லியன் அமெரிக்கர்கள் வேலையிழந்து தவிப்பதாகக்கூறி, அரசிடம் உதவிகள் கோரியுள்ளதாக தெரிவித்தனர்.
அமெரிக்க வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு கடந்த மார்ச் மாத்திலிருந்து ஐந்தில் ஒரு அமெரிக்கர் வேலையிழந்து தவித்துவருவதாக கூறிய அவர்கள் அதிபர் ட்ரம்பிற்கு சில யோசனைகளையும் கூறியுள்ளனர்.
அதில், எச் 1பி விசா உள்ளிட்ட அனைத்து விசாக்களையும் விண்ணப்பிப்பதற்கு அறுபது நாள்கள் தடை விதிக்கவேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதன்காரணமாக, பிற நாடுகளிலிருந்து அமெரிக்கா வருபவர்களை கட்டுப்படுத்த முடியும் எனவும், மேலும் நோய்த் தொற்று கட்டுக்குள் இருப்பதுடன், அமெரிக்கர்களுக்கான வேலைவாய்ப்புகள் பறிக்கப்படுவது கட்டுப்படுத்தப்படும் எனவும் தெரிவித்தனர்.
அமெரிக்கர்களுக்கான வேலைவாய்ப்பின்மை கட்டுக்குள் வரும்வரை இந்த முடிவினை பின்பற்றவேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இது நடைமுறைப்படுத்தப்பட்டால் கல்வி கற்க, சொந்த பணிகளுக்காக, அமெரிக்காவில் பணிபுரிந்துவருபவர்களும், சுற்றுலாவிற்காக அமெரிக்கா செல்பவர்களும் மிகுந்த சிரமத்திற்குள்ளாவார்கள்.
இதையும் படிங்க: அமெரிக்காவில் இந்தியர்கள் வேலையிழக்கும் அபாயம்!