ETV Bharat / international

இந்திய அமெரிக்க தம்பதி கண்டுபிடித்த விலை மலிவான வென்டிலேட்டர் - விலை மலிவான வென்டிலேட்டர்

கரோனாவுக்கு எதிரான போரில் மருத்துவர்களுக்கு உதவும் நோக்கில், இந்திய - அமெரிக்க தம்பதி விலை மலிவான வென்டிலேட்டரை கண்டுபிடித்துள்ளனர்.

இந்திய அமெரிக்க தம்பதி
இந்திய அமெரிக்க தம்பதி
author img

By

Published : May 26, 2020, 10:29 AM IST

கரோனா வைரஸ் நோயின் தாக்கம் சில நாடுகளில் குறைந்தாலும் பல்வேறு நாடுகளில் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. குறிப்பாக, ஆசிய நாடுகளில் நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கரோனாவுக்கு எதிரான போரில் மருத்துவர்களுக்கு உதவும் நோக்கில், இந்திய - அமெரிக்க தம்பதி விலை மலிவான வென்டிலேட்டர்களை கண்டுபிடித்துள்ளனர். இதனை விரைவில் தயாரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளில் குறைந்த விலையில் இந்த வென்டிலேட்டர்கள் விற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வென்டிலேட்டர்கள் பற்றாக்குறை நிலவுவதாக குற்றச்சாட்டு எழுந்துவரும் நிலையில், புகழ்பெற்ற ஜார்ஜியா டெக்ஸ் ஜார்ஜ் டபுள்யூ உட்ரஃப் ஸ்கூல் ஆப் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்துவரும் தேவேஷ் ரஞ்சன், அவரின் மனைவியும் மருத்துவருமான குமுதா ரஞ்சன் ஆகியோர் இணைந்து மூன்றே வாரங்களில் இந்த வென்டிலேட்டரை உருவாக்கியுள்ளனர்.

இதுகுறித்து பேராசிரியர் ரஞ்சன் கூறுகையில், "நீங்கள் எவ்வளவு வென்டிலேட்டர்களை தயாரித்தாலும், நாங்கள் கண்டுபிடித்த வென்டிலேட்டர்களை தயாரிக்க வெறும் 100 அமெரிக்க டாலர்கள் மட்டுமே ஆகும். அதனை 500 அமெரிக்க டாலர்களுக்கு விற்றால்கூட, தயாரிப்பாளருக்குக் கண்டிப்பாக லாபம் கிடைக்கும்.

அமெரிக்காவில் மற்ற வகையான வென்டிலேட்டர்கள் 10,000 அமெரிக்க டாலர்களுக்கு விற்கப்படுகிறது. அவசர சிகிச்சை பிரிவில் பயன்படுத்தப்படும் விலை உயர்ந்த வென்டிலேட்டர் வகையை நாங்கள் கண்டுபிடிக்கவில்லை. சுவாசக் கோளாறு பிரச்னையில் சிக்கி தவிக்கும் கரோனா நோயாளிகளுக்கு மட்டுமே இந்த வென்டிலேட்டர்கள் பயன்படுத்த வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: இந்திய - சீன உரசல்: பின்னணியில் உள்ள 10 காரணிகள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.