கரோனா தீநுண்மி பரவல் உலகின் பல்வேறு நாடுகளில் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில், அதற்கான தடுப்பூசி இன்னும் கண்டுபிடிக்கப்படாததால் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள பல நாடுகள் திணறிவருகின்றன.
பல நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோதிலும் தீநுண்மி பரவுவது கட்டுக்குள் வராமல் அதிகரித்துக்கொண்டே போவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக இருக்கிறது.
இது ஒருபுறமிருக்க, அறிகுறி இல்லாதவர்களிடமிருந்து பிறருக்குத் தொற்று பரவுவது அரிதாகத்தான் இருக்கிறது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், நேற்று (ஜூன் 10) செய்தியாளர்களிடம் பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம், "கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் (ஜூன் 7) இதுவரை இல்லாத அளவிற்கு உலகம் முழுவதும் 1.3 லட்சம் பேருக்கு மேல் கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. தென் அமெரிக்க நாடுகளில் கரோனா பாதிப்பு அதிகமாகிக்கொண்டே போகிறது.
தற்போது உலக நாடுகளில் இரண்டாம் கட்ட பரவலைத் தடுப்பதற்கான ஆலோசனைகளில் ஈடுபட்டுவருகிறோம்.
இதனை உடனே கட்டுக்குள் கொண்டுவராவிட்டால் மிகப்பெரிய அளவில் இழப்புகளைச் சந்திக்க நேரிடும்" எனக் கவலை தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தேசிய தலைவரை மணக்கும் பினராயி மகள்!