அமெரிக்காவில் உள்ள தென்கிழக்கு அலாஸ்காவில் சுற்றுலாப் பயணிகள் சென்ற விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதிலிருந்த ஆறு பேர் உயிரிழந்ததாக அமெரிக்க கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர்களின் விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. விமானத்தில் இருந்த ஐந்து பயணிகள் ஹாலாந்து அமெரிக்கா லைன் க்ருஸ் கப்பலில் பயணம் செய்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. கெச்சிகன் என்னும் இடத்தில் இந்தக் கப்பல் நிறுத்தப்பட்டது.
இங்கிருந்து பல்வேறு இடங்களுக்கு பயணிகள் சுற்றுலா மேற்கொள்ளலாம். விபத்துக்குள்ளான விமானத்தில் ஐந்து சுற்றுலாப் பயணிகளும், விமானியும் இருந்ததாக அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இறுதியான விவாகரத்து: மெலிண்டாவை சட்டப்படி பிரிந்தார் பில் கேட்ஸ்