இந்திய எல்லையான கிழக்கு லடாக்கில் இந்திய வீரர்கள் மீது சீன ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தி 20 பேரை கொன்றனர். இந்தத் தாக்குதலில் இந்திய வீரர்கள் பலர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இந்திய வீரர்கள்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தினார்கள் என்று சீனா அபாண்டமாக பழி சுமத்தி வருகிறது. இது குறித்து பேசிய அந்நாட்டின் வெளியுறவு அலுவலர்கள், “இந்திய வீரர்களின் தாக்குதலால் சீன வீரர்கள் காயமுற்றனர்” என கூறியுள்ளார்.
இதனை ஆளும் கட்சி கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் குளோபல் டைம்ஸ் பத்திரிகை ஆசிரியரும் உறுதிப்படுத்தியுள்ளார். இந்திய- சீனாவுக்கும் இடையே எல்லை பதற்றம் கடந்த சில வாரங்களாக நீடித்துவந்தது.
இந்நிலையில் இந்தியாவுக்கும் சீன ராணுவத்துக்கும் இடையே நடந்த வன்முறை தாக்குதலில் சீன தரப்பில் 35 பேர் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க செய்தி நிறுவனம் தெரிவித்திருந்தது.
இதற்கிடையில் இந்திய- சீனா எல்லைப் பிரச்னை குறித்து கூர்ந்து கவனித்துவருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. முன்னதாக கடந்த 2ஆம் தேதி, இந்திய- சீன எல்லை விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், பிரதமர் நரேந்திர மோடியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியிருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.
இதையும் படிங்க: நேர விரயம் இல்லாமல் குறைந்த செலவில் கரோனா பரிசோதனை!