ஆப்கானிஸ்தானில் சமீப காலமாக பொதுமக்கள் மீதான வன்முறை அதிகரித்துவருவது கவலைத் தருவாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. கடந்த வாரத்தில் அங்குள்ள பொது மருத்துவமனையில் நடைபெற்ற தாக்குதலில் 24 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு யாரும் பொறுப்பேற்காத நிலையில், ஐஎஸ் அமைப்புதான் காரணமாக இருக்கும் என அமெரிக்க உளவுத்துறைத் தெரிவித்துள்ளது.
ஆப்கானில் சில மாதத்திற்கு முன்னர்தான் அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அங்கு ஒப்பந்தத்திற்குப்பின் வன்முறை தாக்குதல் தீவிரமைடைந்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் 208 பொதுமக்களை தலிபான் அமைப்பினர் தாக்குதலில் கொல்லப்பட்டதாகவும், 172 பொதுமக்கள் பாதுகாப்பு படையினர் தாக்குதலில் கொல்லப்பட்டதாகவும் ஐநா அறிக்கை தெரிவிக்கிறது.
இந்தச் சூழல் குறித்து வருத்தம் தெரிவித்த ஐநா, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் அனைத்து தரப்பும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் எனவும் தங்களின் விரோதத்திற்கு அப்பாவி மக்களின் உயிர்களை பறிக்கக் கூடாது என அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 3 ஆயிரம் புலம்பெயர் தொழிலாளர்கள் இமாச்சல் வருகை!