கலிபோர்னியா மாகாணம் பியூட் மாவட்டத்திலிருக்கும் கிறிஸ்தவ ஆலயத்தில் அன்னையர் தின சிறப்புப் பிரார்த்தனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 180 பேர் கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
இதில் கலந்துகொண்ட பெண்ணுக்கு நேற்று கரோனா உறுதிசெய்யப்பட்டது. இந்தப் பிரார்த்தனைக் கூட்டத்தில் அதிகம் பேர் கலந்துகொண்டதால் சமூகப் பரவல் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
இது குறித்து அம்மாவட்ட சுகாதாரத் துறை அலுவலர்கள் கூறும்போது, "மக்கள் கூடுவதற்கு விதித்துள்ள தடையை மீறி அந்தத் தேவாலயத்தில் பிரார்த்தனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.
விரைவாகத் தளர்வுகள் அமலுக்குவருவது பெரிய அளவிலான பாதிப்பை உண்டாக்கும் வாய்ப்பிருக்கிறது. கரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மீண்டும் தீவிரப்படுத்த வேண்டிய தேவையிருக்கிறது" என்றனர்.
இதையும் படிங்க: கரோனாவிற்கு முற்றுப்புள்ளி வைத்த முதல் நாடு!