அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணம், ஃபிரெஸ்னோ என்ற நகரில் உள்ள ஒரு வீட்டின் கொல்லைப்புறத்தில் நேற்று இரவு (உள்ளூர் நேரப்படி) குடும்ப விருந்து நடைபெற்றுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான விருந்தினர்கள் கலந்துகொண்டனர். இதனிடையே, அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் விருந்தினர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினார்.
இதில், நான்கு பேர் உயிரிழந்தனர், ஆறு பேர் காயமடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் காயமடைந்தோரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினார். தொடர்ந்து அந்தப் பகுதியைச் சுற்றி வளையம் அமைத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சம்பவம் குறித்து ஃபிரெஸ்னோ துணை தலைமைக் காவலர் மைக்கில் ரெய்ட் கூறுகையில், "துப்பாக்கிச் சூட்டில் 25-30 வயதுக்குட்பட்ட 4 ஆண்கள் கொல்லப்பட்டனர். குற்றவாளியை தீவரமாகத் தேடி வருகிறோம்" என்று தெரிவித்தார்.
சில நாட்களுக்கு முன்பு, கலிஃபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தனியார் பள்ளி ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இரண்டு மாணவர்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பிறந்தநாள் பரிசாக துப்பாக்கிச் சூடு - இரு மாணவர்கள் மரணம்!