தென் அமெரிக்க நாடான பிரேசில் உலகில் அதிக கோவிட்-19 பாதிப்பை கண்ட நாடாக உள்ளது. உலகளவில் கோவிட்-19 காரணமாக அதிக உயிரிழப்பை சந்திக்கும் நாடாக பிரேசில் திகழ்கிறது. அங்கு கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் நான்காயிரத்து 195 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
அங்கு பொதுமுடக்கம் (லாக் டவுன்) கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டின் சுகாதாரத்துறையினர், பொருளாதார நிபுணர்கள் மேலும் சில வாரங்களுக்கு இந்தக் கட்டுப்பாடுகள் தொடர வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றனர்.
அங்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தொடர்ந்து மந்தமாக நடைபெற்றுவருகின்றன. மொத்த மக்கள் தொகையில் மூன்று விழுக்காட்டினருக்கு மட்டுமே இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இன்றுவரை (ஏப்.7) பிரேசில் நாட்டில் மொத்த கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கை ஒரு கோடியே 31 லட்சத்து ஆறாயிரத்து 58 ஆக உள்ளது. மூன்று லட்சத்து 37 ஆயிரத்து 364 உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.
இதையும் படிங்க: சிறையில் மீண்டும் மோசமடையும் அலெக்ஸி நவல்னி உடல்நிலை