கரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் குறைந்துவருகிறது. இதனிடையே, தடுப்பூசியைக் கண்டுபிடிக்கும் இறுதி கட்ட சோதனைகள் பல்வேறு நாடுகளில் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், அஸ்ட்ராஜெனெகா நிறுவனம், புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஒரு தடுப்பூசியைக் கண்டுபிடித்தது.
மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரும் நோக்கில், இத்தடுப்பூசி தன்னார்களுக்கு செலுத்தப்பட்டு அதில் ஏதேனும் பக்கவிளைவுகள் ஏற்படுகிறதா என ஆராயப்பட்டுவருகிறது. இதற்கிடையே, பிரேசில் நாட்டில் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை எடுத்துக் கொண்ட தன்னார்வலர் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இருப்பினும், தடுப்பூசி சோதனை தொடர்ந்து நடைபெற்றுவருவதாக பிரேசில் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர் பிரேசில் நாட்டை சேர்ந்தவர் எனவும், அதற்கு மேல் தன்னார்வலர் குறித்த விவரங்களை வெளியிட முடியாது எனவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில், "சோதனை முடிவுகள் குறித்து சுதந்திரமாக ஆராயப்பட்டுவருகிறது. தடுப்பூசி சோதனையில் பிரேசில் தன்னார்வலர் உயிரிழந்தது குறித்து ஆராயப்பட்டதில் சோதனை பாதுகாப்பாக நடைபெற்றது தெரியவருகிறது. எனவே, சோதனையை தொடர பரிந்துரை செய்துள்ளோம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கிரீஸ் நாட்டிற்கு சுற்றுலா சென்றதற்காக மக்களிடம் மன்னிப்புக் கேட்ட டச்சு மன்னர் !