தென் அமெரிக்க நாடான பிரேசிலில் கோவிட்-19 பாதிப்பு கவலை அளிக்கும் விதமாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சுற்றுலாத்துறைக்கு பெயர்போன பிரேசிலில் இந்த ஆண்டு புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் உள்ளிட்டவை முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டுள்ளன.
முக்கிய சுற்றுலாத்தலங்களான ரியோ டி ஜெனிரோ, சா பாலோ ஆகிய நகரங்களில் கோவிட்-19 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், அந்நாட்டின் துணை அதிபர் ஹாமில்டன் மோராவுக்கு கோவிட்-19 பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதையடுத்து துணை அதிபர் மாளிகையில் அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.
முன்னதாக அந்நாட்டின் அதிபர் ஜேர் போல்சனாரோ, அவரது மனைவி இருவருக்கும் கடந்த ஜூலை மாதம் கோவிட்-19 பாதிப்பு ஏற்பட்டது. உலக அளவில் கோவிட்-19 பாதிப்பு பட்டியலில் மூன்றாவது இடத்தில் பிரேசில் உள்ளது. அந்நாட்டில், இதுவரை 74 லட்சத்து 84 ஆயிரத்து 285 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், ஒரு லட்சத்து 91 ஆயிரத்து 139 பேர் பலியாகியுள்ளனர்.
இதையும் படிங்க: இன்னும் சில வாரங்களில் மோசமான பாதிப்பை அமெரிக்கா சந்திக்கும் : பெருந்தொற்று நிபுணர் கவலை