இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் கோவிட்-19 தடுப்பூசிகளை பிரேசில் அரசு வாங்க ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்தியாவைச் சேர்ந்த பாரத் பயோட்டெக் நிறுவத்துடன் பிரேசில் அரசு மேற்கொண்ட ஒப்பந்தத்தில் முறைகேடு ஏற்பட்டுள்ளதாக புகார் கிளம்பியுள்ளது.
பிரேசில் அதிபர் மீது விசாரணை
தடுப்பூசிக்கான விலையை அதிகம் வைத்து கொள்முதல் செய்ததாக பிரேசில் அதிபர் ஜேர் போல்சனாரோ மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதிபர் மீதான இந்தப் புகாரை விசாரித்து 90 நாள்களில் அறிக்கை தாக்கல் செய்ய பிரேசில் நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஒரு டோஸ் தடுப்பூசியின் விலை இந்திய மதிப்பில் நூறு ரூபாய் என்று கணக்கிடப்பட்டுள்ள நிலையில், அதை பத்து மடங்கு அதிகம் கொடுத்து பிரேசில் அரசு வாங்கியுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
ஆனால் விற்பனையில் எந்த முறைகேடும் இல்லை என பாரத் பயோட்டெக் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த புகார் உறுதி செய்யப்பட்டால் அதிபர் போல்சனாரோ பதவியே ஆட்டம் காண வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: மெஸ்ஸியின் கலக்கல் ஆட்டம் - அரையிறுதிக்கு முன்னேறிய அர்ஜென்டினா