தென்அமெரிக்க நாடான பிரேசிலில் கோவிட்-19 பாதிப்பு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு 3,251 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. நாளுக்கு நாள் பாதிப்பு உயர்ந்துவருதால், ஐசியு வார்டுகள் நிரம்பிவருகின்றன.
மருத்துமனையில் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் அனுமதியாவது அதிகரித்துவருவதால், அங்கு சுகாரதார வசதிகள் ஆட்டம் கண்டுவருகின்றன. மற்ற நாடுகள் காணாத வகையில் நாள்தோறும் அதிக உயிரிழப்பை பிரேசில் கண்டுவருவதால், கோவிட்-19 பெருந்தொற்றின் புதிய மையம் என வல்லுநர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
பிரேசிலில் இதுவரை ஒரு கோடியே 21 லட்சத்து 36 ஆயிரத்து 615 பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை இரண்டு லட்சத்து 98 ஆயிரத்து 843ஆக உள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை மூன்று லட்சத்தைத் தாண்டும் இடர் உள்ளதாக நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சகம் கவலை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: 6000 ஆண்டுகளுக்கு பிறகு வெடித்து சிதறும் எரிமலை!