அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆப்கானிஸ்தானில் உள்ள கள நிலவரம் குறித்து நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அதில் தாலிபான்கள் ஆட்சி, அமெரிக்கர்களின் மீட்பு நடவடிக்கை ஆகியவை குறித்து விரிவாகப் பேசினார்.
அப்போது, "காபூல் விமான நிலையம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளின் பாதுகாப்பு வளையத்தை அமெரிக்க பாதுகாப்பு படையினர் உறுதி செய்துள்ளனர். வரலாற்றில் இதுவரை செய்யாத மீட்பு நடவடிக்கையை அமெரிக்கா ஆப்கனில் மேற்கொண்டு வருகிறது. ஆப்கனிலிருந்து இதுவரை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
தாலிபான்களுக்கு தடை விதிப்போம்
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் விலக வேண்டிய சரியான தருணம் இதுவே ஆகும். ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் மீட்பு நடவடிக்கைகளை முடிக்கத் திட்டமிட்டுள்ளோம்" என்றார்.
தொடர்ந்து, தாலிபான்கள் மீது அமெரிக்க அரசு பொருளாதாரத் தடை விதிக்குமா என்ற கேள்விக்கு, "அமைதி ஒப்பந்தத்தை முறையாகப் பின்பற்றுவோம் என தாலிபான்கள் உறுதியளித்துள்ளனர். அவர்களின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அவர்கள் அத்துமீறலில் ஈடுபட்டால் பொருளாதாரத் தடை விதிக்க அமெரிக்க அரசு தயங்காது" என்றார்.
இதையும் படிங்க: தலிபான்களை அலறவிடும் 'பன்ஜ்ஷீர்' மாகாணம்... அசைக்க முடியாத கோட்டை!